நெஞ்சிருக்கும் வரை நட்பு

பாதியிலிருந்து சொந்தம்
ஆதியிலிருந்து நட்பு
பொருள் இருக்கும் வரை சொந்தம்
நெஞ்சிருக்கும் வரை நட்பு
உதட்டில் உறவு சொந்தம்
உள்ளத்தில் உறவு நட்பு
இடுக்கண் வந்தால்
விலகி ஓடும் சொந்தம்
இரு கண்ணையும்
ஈய தயங்காது நட்பு
சந்தேகப்பார்வை சொந்தம்
நம்பிக்கை வளர்க்கும் நட்பு
பொறாமை கொள்ளும் சொந்தம்
பொருமை காக்கும் நட்பு
பாகப்பிரிவினை சொந்தம்
இரு தேகம் ஓர் உயிர் நட்பு
வீடுவரை சொந்தம்
கடைசிகாடு வரை நட்பு....

எழுதியவர் : செல்வமுத்து.M (27-Feb-17, 3:01 am)
பார்வை : 795

மேலே