கவிதை உடை

கவிதை உடை
==============

எழுத்தென்னும் தறியில்..

எண்ணமெனும்நூலை நுழைத்து..

கவிதையெனும் செந்தமிழ்ஆடை யொன்றை..

கவிஞர்களே கவிநயத்துடன் படையுங்கள்..அதை

கவிதைநாயகிக்கு காணிக்கையாக்கி..

காண்பவர்களை வியக்கவையுங்கள்..

ஆடைநெய்யும்போது அரைகுறை கவனமுடன்

அந்நியமொழியெனும்..ஓட்டை தெரியாமல்

அழகுதமிழ் உணர்வுடன்

அழகாகத் நெய்யுங்கள்..இல்லையேல்

ஆடையுடுத்தி அழகு பார்க்கும்போது..

கவிதை நாயகியவள்..நாணி

இலக்கிய வெட்கமடையப் போகிறாள்!..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (27-Feb-17, 1:54 pm)
பார்வை : 222

மேலே