விவசாயி மனிதாநேயம் காக்க புறப்பட்டு

புறப்படு! மனிதா! புறப்படு!மனிதநேயம் காக்க புறப்படு!
சாதி என்ன சாதி?!
காற்றுக்கென்ன வேலி?!

வெள்ளையனிடம்
சுதந்திரம் பெற்றோம் என்று இறுமாப்பு கொள்ளாதே...

அவன் ...
அறியாமையிடம்
உன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான்
என்பதனை
நீ அறிவாயா!..

"குளிர்பானத்திற்கும், மதுப்பானத்திற்கும்"
உன்னிடமே...
உன் ரத்தம்..
"தண்ணீராய்"
உறிஞ்சப்படுவத்தை
நீ அறிவாயா!!..

நம்முடைமைக்கே...
நாமே! நாயாக!
காவல் நிற்கிறோம்
என்பதை
இப்போதாவது
அறிவாயா!!!..

வீரம் காக்க ஓர் குரலாய்
ஒலித்தாயே தமிழ்நாட்டில்...

இன்று..
தான்"மானம்" காக்க
தற்கொலை செய்யும்
விவசாயின்,
மனிதநேயம் காக்க
எப்பொழுது
நீ எழுவாய்!..

தூர்வாறு, தூர்வாறு...
கிணறு, குளம்,
ஏரி, ஆறு என்று
அனைத்தையும் தூர்வாறு...
அத்தோடு சேர்ந்து
உன் அறிவையும் தூர்வாறு..

கைகட்டி வாய் பொத்தி
ஏவேலெல்லாம் செய்ய
ஹிட்லர் ஆட்சி இங்கில்லை...

கை காட்டி மைதீட்டி நீ சொல்வேதெல்லாம்
மக்களாட்சி இங்குண்டு...

பேச்சுரிமை, எழுத்துரிமை
எல்லாம் சட்ட சாசனம்
மட்டும் அல்ல..

நீ பேசு! நீ பேசு!
உண்மையெல்லம்
வெளி வரட்டும்
நீ பேசு! நீ பேசு!

சிந்தித்து செயலாற்று..
சிகரத்தையும்
உன் மதியால் சரித்திடலாம்...

வீரம் காத்தோம் அன்று...
தன்"மானம்" காக்க
துணிவாய் இன்று..

புறப்படு! மனிதா! புறப்படு! மனிதநேயம் காக்க புறப்படு!!!

எழுதியவர் : எம் அம்மு (28-Feb-17, 8:13 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 84

மேலே