போராட்டம்

வாழ்க்கையே
ஒரு போராட்டம்
உரிமைகளுக்காக
தண்ணீருக்காக
நல் கட்டமைப்பு வசதிக்காக
வேலைவாய்ப்புக்காக
உயர்கல்விக்காக
இட ஒதுக்கீட்டுக்காக
தனியார் மயமாக்குதலை
எதிர்த்து போராட்டம்
உழவர்களின் வாழ்வாதார
போராட்டம்
உணவுக்காக உண்ணாவிரத
போராட்டம்
மனிதன் பிறந்திதலிருந்து
இறக்கும் வரை ஏன்
இறந்தபின்பும் கல்லரைக்காக
போராட்டம்
சுதந்திர நாட்டில்
தினம் தினம் எத்தனை போராட்டம்...

அடிமை சங்கிலியை
ஒடைத்தெறிக்க அன்று
ஆங்கிலேயரிடம் போராட்டம்
கொத்தடிமையை ஒடைத்தெறிக்க
இன்று முதலாளிகளிடம் போராட்டம்
எல்லை பங்கீட்டில்
வெளிநாட்டு போராட்டம்
நதி பங்கீட்டில்
உள்நாட்டு போராட்டம்
என்று தனியும் இந்த போராட்டம்...

இத்தனை போரட்டங்களின்
நடுவே மன போராட்டத்தோடு
செத்து செத்து பிழைக்கிறான் மனிதன் ஒரு ஜான் வயிற்றுக்காக...

எழுதியவர் : செல்வமுத்து.M (28-Feb-17, 9:34 am)
Tanglish : porattam
பார்வை : 625

மேலே