மழையே பொழிக அருள்க

மார்ச் 7 , 2017 முதல் மழை வேண்டி இயற்கையை வேண்டி எழுதப்பட்ட கவிதை

மழையே பொழிக அருள்க
மண்தான் குளிர வருக

மேகமே பாடி மேளம் கொட்டு
தாகம்தான் தீர்க்க தாளமிட்டு
மழையே பொழிக அருள்க
மண்தான் குளிர வருக

பூக்களும் பூமாதேவிக்கு பூத்திடத்தான்
புழு பூச்சியும் புத்துயிர் பெற்றிடத்தான்
கல்கொண்ட மண்ணும் கரைந்திடத்தான்
மண் கொண்ட வேரும் பிழைத்திடத்தான்
அநியாயம் நடக்கும் உலகு பாராமல்
நியாயம் ததும்பும் உயிர் பார்த்து
மழையே பொழிக அருள்க
மண்தான் குளிர வருக

நொடியும் ஓடியும் செடியும் கொடியும்
விடிந்தால் நிமிரும் தழைக்கும்
துளியாய் விழுந்தால் துளிர்க்காதோ
அழைத்தோம் வந்து பொழியாயோ

கடலுள்ள நீரை மேகம் எடு
பகலவனே காற்றுக்குப் பதவி கொடு
வணங்கினோம் இயற்கையே வந்துதவு
வானத்தாய் நீ வள்ளல்தான் வழங்கி விடு
பச்சை விரிப்பு புவி முழுதும்
இயற்கையை வணங்கி துதிப்போம் இனி முழுதும்
படித்தேன் பாடம்
இயற்கையிடம் நான் தோற்று
துளியாய் துளியாய் துளியாயோ..!

மழையே பொழிக அருள்க
மண்தான் குளிர வருக

எழுதியவர் : செ.பா.சிவராசன் (1-Mar-17, 9:34 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 213

மேலே