ராமு-சோமு உரையாடல்- மாமூலும் ,கருவேல காடு பற்றியும் -சிந்திக்க, சிரிக்க

ராமு : சோமு என்னடா ஏதோ உனக்குள்ளே சொல்லிக்கொண்டு
சிரிச்சிட்டுவரையே, ஏதோ விஷயம் இருக்கும்னு தான்
நெனைக்கறேன்............!!!!!!!!!!!!!!!!!


சோமு : ஐயா , ஒண்ணுமில்ல இன்னிக்கு தமிழ்த்தால் ல படிச்சேன்
நம்ம தமிழகத்துல பல இடங்களில் இந்த கருவேல மரம்
சூரிய ஒளி கூட புக முடியாத அளவுக்கு அடர்த்தியாய் காடு போல
வளைந்து மேலும் பரவிவருவத்திகாகவும் அதை முதலில்
வேலிக்காய் கொண்டுவந்த அரசாங்கம் இப்போ அதை
அழிக்க திக்குமுக்காடுதாமே;ஐயா

இதப்பத்தி யோசிச்சேன் அப்போ பளீர்னு என் மனசுல
ஒன்னு தோணிச்சு ஐயா அதை நெனச்சேன் சிரிப்பு வந்தது ஐயா


ராமு : அது என்னடா முழுசா சொல்லிட்டு சிறியேன் நானும்
சேர்ந்து நகைக்க


சோமு : ஐயா எங்க தாத்தா சொல்லுவாரு , அந்த காலத்துல வெள்ளைக்காரன்
நம்ம ஆளாச்சே , பிட்டு பிட்டாய் இருந்த சிற்றரசர்களை
பிரித்து , ஒருவருக்கொருவர் சண்டை இட்டு மடிய, இந்த வெள்ளையன்
நடுவில் புகுந்து ஒருவனுக்கு துணையாய் இருப்பான் ,எதிரி அழிவான்
வெற்றியை தனதாக்கி கொண்டு, நாட்டை பிடுங்கி அதற்கு பதில்
ஏமாந்த சிற்றரசுக்கு சில வெளி நிலங்கள் , அவன் நிலங்களையே
பரிசாய் அளித்து ஏமாற்றுவான் -----இதுவே "பக்ஷீஸ்"ஆகும்
மாமூல் என்றும் கூறலாம் ......................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த மாமூல் மேல மேல அந்த கருவேலம் மரம் போல் பரவி
இன்று நம் நாட்டில் கட்சியில்,விளையாட்டில்,அரசாங்க அலுவலகத்தில்
மற்றும் வாழ்க்கையில் எங்கெங்கோ அளிக்க முடியா வினையாய்
இருக்கே .....................................இதை எப்படி அளிப்பது.................நாட்டை
சீர்படுத்துவது ..................................இதை யோசிச்சேன் சிரிப்பு வந்தது ஐயா


ராமு : டேய் டேய் ; உன்னுள் இதனை சிந்தனைகள் ஓடுதா நினைத்தால்
உன்னை நினைத்தால் பெருமை படுகிறேன்................நீ ஒரு
படிக்காத மேதை தான் சோமு
மாமூல் வந்த சரித்திரம், அது பரவும் விதம் சிரிக்க மூட்டினாலும்
சிந்திக்க வைக்குது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Mar-17, 12:05 pm)
பார்வை : 258

சிறந்த நகைச்சுவைகள்

மேலே