போரட்டவெற்றி

எங்கள்
காளைகளின் கால்களுக்கு
கயிறுகள் கட்டினீர்கள்
எங்கள்
வாடிவாசலை
பூட்டிவைத்திர்கள்
ஏனென்று கேட்டால் ?
அரசின் சட்டம்
நீதிமன்ற தீர்ப்பென்றிர்கள்
ஒட்டுமொத்த தமிழகமும்
நிமிர்ந்தெழுந்து
மத்திய அரசே
உன்னை எதிர்த்து
கண்டித்தபோதோ
ஏறுதழுவுதல்
உங்கள்
உரிமையென்றிர்கள்!

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (3-Mar-17, 6:21 pm)
பார்வை : 215

மேலே