நம் தந்தை

நாம் செல்லவேண்டிய பாதையில்
முதலில் நடந்து செல்பவர்
முட்களையும் கூர்கற்களையும்
தன் உள்ளங்காலில் வாங்கிக்கொள்பவர்
கடும் வலியை கூட இயல்பாய் தாங்கிக்கொள்பவர்
தன் உள்ளமென நினைக்கும் நம்மை
அப்பாதையில் நடக்கவைப்பவர்
எது பள்ளம் எது மேடு எது சமம் என
நமக்கு புரியவைப்பவர்
நம் உருவத்திற்கும் உயிருக்கும்
உரிமைகொண்டவர்
நாம் இவ்வுலகில் வாழ
உரிமை தந்தவர்
தன் உதிரத்தால் உயிரையும்
தன் உழைப்பால் உணவையும்
தன் வீரத்தால் பாதுகாப்பையும்
தன் தியாகத்தால் கடமையும்
பொறுப்போடும்
பொறுமையோடும்
பெருமையோடும்
நிறைவேற்றித்தந்தவர்
பாசமிகு நம் தந்தையர் !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (3-Mar-17, 9:01 pm)
Tanglish : nam thanthai
பார்வை : 189

மேலே