எண்ணம் விட்டுக்க

ஒய்..! ஒய்..! ஒய்..!
ஒய்..! ஒய்..! ஒய்..!
மீத்தேன எடுக்காதீங்கய்யா
மண்ணுக்கது தீங்கய்யா
ஓடி வாங்கையா.. தடுங்கய்யா
பொன்னப்பா...! தங்கப்பா..! செல்லப்பா..!
பொன்னையா..! தங்கையா..! செல்லையா..!
ஒய்..! ஒய்..! ஒய்..!
ஒய்..! ஒய்..! ஒய்..!
ஓடி வாங்கையா..தடுங்கய்யா

பஞ்சத்தை தா பங்கு வச்சு தர பாக்குறாண்டோ
லஞ்சத்தை வாங்கி வாங்கி பதுக்குராண்டோ

வரப்ப கேட்டு வயலை கேட்டு
வயிறையும்தான் கேக்குறான்
ஆச மூட்டி வீறாப்பா கேட்டு
உசிரையும்தான் எடுக்கிறான்

மண்ணுக்கேது மதிப்புன்னு
மலிவாகத்தான் பேசுறான்
இப்படியே விட்டு விட்டா ஒய்..
சோலைவன சொர்க்கம்
பாலைவனம் திறக்கும்
சொத்து சுகம் செத்து விழும்
மொத்த மண்ணும்
சுடுகாடுதான் ஒய்..! ஒய்..!

இரத்த சொந்தம் பசிச்சிருக்கும்
வெளிநாட்டுக்காரன்
உணவு தரும் வரைக்கும் ..!

சுவாசத்தைப் பறிக்கிறான் சுதந்திரமா தந்திரமா
சும்மா இருப்பதா off ஆன எந்திரமா..?
எந்திரத்தில் வாக்களிக்கும் இந்திரரே ..!
செருமய்யா ஒண்ணு
காப்பாத்துவோம் காப்பாத்துவோம் - இது
நம்மளோட மண்ணு ..!

விளை நிலமும் கோயில்தான்
விவசாயியும் சாமிதான் ..!
மண்ண ஆள மன்னராட்சி
இருந்த காலம் போச்சு
மக்கள ஆள மக்களாட்சி
மக்களோடு மல்லு கட்டலாச்சு

ஊருக்காக வாழும் தலைவன்
வெளி நாட்டுக்காக உழைக்கிறான்
சொந்த நாட்டுக்கு சூனியம் வைக்க
சொகுசு காருலதான் போகிறான் ..!
ஓட்டிருக்கு பத்திரமா கைய வச்சுக்க
நோட்டு வாங்கி ஒட்டு போடும்
எண்ணம் விட்டுக்க...!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (4-Mar-17, 10:14 pm)
பார்வை : 74

மேலே