வெட்கம்

உலகை அறியா உயிரான இவள்
இன்று யாரிடம் கேட்டு அறிந்தாள்?!
வெட்கத்தினை!,

என்றுமே இவளிடம் உள்ள
நாணத்தினை நான் இன்றுதான்
இவளிடம் கண்டேன்!,

இவளிடம் நாணத்தினை கண்ட நான்
மறந்தேன்!
இன்று என் நாழிகைகளை,

தலைநிமிர்ந்து தன் அழகில்
என்னை இழுக்கும்
தளிர் மலர் இன்று
தலைகுணிந்து நிற்கிறாள்
வெட்கத்தில்!

என்றும் இல்லாத மாற்றம் என இவளின்
விழிகள் இடம் மாற
விரல்கள் தடுமாற
மாற்றம் அது இவளை
முழுவதும் ஆட்சி செய்ய!

என்றுமே அழிகியான என் அழகி
இன்று பேரழகியானால்
வெட்கத்தினால்...!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (5-Mar-17, 4:04 pm)
Tanglish : vetkkam
பார்வை : 471

மேலே