தமிழ்

ஒவ்வொரு தமிழனின்
இரு கண்களால் உலாவி
முத்தமிழின் இனிமையை உணர
நாற்றிசையும் எக்களிக்க
ஐம்பூதமும் அடங்கிப் போகும்
அறுசுவை கொண்ட நம் தமிழிடம்
ஏழறிவால் உண்டான
எண்திசையும்
ஒன்றாகி
அம்மாவில் தொடங்கி ஔவியம் வரை
அச்சம் தவிர்க்க
ஆதாயம் நம் தமிழ்
இமயம் முதல் குமரி வரை
ஈதல் கற்பிக்கும்
வள்ளல் நம் தமிழ்
உன்னிடம் ஆரம்பித்து என்னிடம் கூட
உருகிக் தான் பேசும்
உரிமையுடன்
ஒற்றுமையில் வேற்றுமை என்றாலும்
ஒன்றுபட்டு நிற்கச் செய்யும்
ஓங்குதனிச் செம்மொழி நம் மொழி
என

ஏகபோகமாய் புகழத் தான் ஆசை என்றாலும்

அடக்கம் அமரருள் உய்க்கும்
என் வள்ளுவரால் அடங்கி
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்
வலியார் முன் தன்னை நினைக்க
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க என
மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும்
என்று நாவடக்கம் கொள்கிறேன்
என்றாலும்
இரண்டடி ,மூன்றடி ,நாலடியில்
அடங்கா நம் தமிழ் மொழி
பலவடி கடந்து
பல்லாண்டு வாழ்ந்து
வாழ்கிறது நம்மோடு
வாழ்வோம் தமிழால் வளமோடு

எழுதியவர் : மீனாட்சி (5-Mar-17, 7:03 pm)
Tanglish : thamizh
பார்வை : 346

மேலே