உழுது வாழ்

வலி இல்லா வாழ்க்கை ஏது
பள்ளம் மேடும் இரண்டும் தானே பாதை

எதுவும் நிரந்தரம் இல்லை எனும் பொழுது
இந்த சோகமும் கடந்து போகும்
வெற்றி உன்னை வந்து சேரும்
முன்னோக்கி எழுந்து நட
இலக்கை அடையும் வரை உட்காராதே
பின்னோக்கி பார்க்காதே
நேரம் வீணாகும்

நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் தூக்கி எறி
பாதையை சீரமை
பாதையின் ஓரங்களில் மரங்கள் நடு
வீதி சமை
அதில் உழவு செய்
உழுது வாழ்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Mar-17, 11:06 pm)
Tanglish : uluthu vaal
பார்வை : 107

மேலே