அழகிய படைப்பு

யார் படைத்த பதிப்பு நீ
எனக்காக காத்திருக்கும்
ஒட்டுமொத்த அழகு தொகுப்பு நீ

பக்கம் பக்கமாய் புறட்டி
தினம் படிக்க வா - நீ

என்னாசை தமிழே
கொண்டு வந்து தா
உன்னிதழை...!

விடியும்வரை
என்னால் முடியும்வரை
வாசித்து பார்க்கிறேன்...

உன்னழகை இரசித்து
நானும் இன்று கவிஞன் ஆகிறேன்...

அழகிய படைப்புதான்
இன்பக் காதல்...!
எழுத்து கூட்டி படிக்கதான்
எனக்கு எப்போதும் ஆவல்...!
யாருமில்ல நேரம் வந்து
என்னை கட்டித்தழுவிச் செல்லுதே...
இளமை மிகுந்த தென்றல்....
அதில் மயங்காதிருக்குமா
என்னுயிர்...?!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Mar-17, 9:41 pm)
Tanglish : alakiya PATAIPU
பார்வை : 336

மேலே