யால ஜங்கில் திருமணம்

(பொன் குலேந்திரன் கனடா)

என் பேரன் விஸ்வாக்கு பதினைந்து வயது. அவன் ஒரு கணினி பைத்தியம்;. இணையத்தில் கணினி இரகசியங்களை ஆய்வு செய்வான்; மற்றும் கணினி விளையாட்டுக்கள் விளையாடுதிலும் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுவான்;. அவன் ஒரு தீவர சிந்தனையாளன் . அவனது கற்பனை சக்தி அபாரம்.

அன்று அவன் பள்ளியில் இருந்து திரும்பியதும்;, விரைவாக முகம் கழுவி, சிற்றுண்டி உண்ட பிறகு, ஒரு பெரிய புன்னகையுடன் என் பக்கத்தில வந்து அமர்ந்தான். நான் ஒரு புத்தகம் வாசிப்பில் பிசியாக இருப்பதை போல் பாசாங்கு செய்து அவனை அலட்சியம் செய்தேன். அவன் என் கவனத்தை கவர என் முகததைப் பாரத்தபடி சில விநாடிகள் காத்திருந்தான்.

"டடாபொப் (DADAPOP) நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறன். நீங்கள் என்னோடு பேசாமல் இருக்குறீர்களே" என்று அவன் உரையாடலை தொடங்கினான்.

அவன் எனக்கு “டடாபொப்” என்ற அடைப்பெயர் அவன் உருவாக்கிய பெயர். அப்படிஅழைப்பதன் காரணம் அவனோடு, மோலில்; உலாவச் செல்லும் போது அவன விரும்பும் பொப்கோர்ன் வாங்கிக் கொடுப்பேன். அதை சுவைத்து உண்ட பின் எனக்கு டடாபோப் என்று என்னை அவன் அழைக்கத் தொடங்கினான். அதவே என் குடும்பத்தில் எனக்கு நிலைத்த பெயராகிவிட்டது.

"அந்தப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நான் சொல்லப் போகும் முக்கிய செய்தியைக் கேளுங’கள் " என்றான் விஸ்வா உரத்த குரலில். அவன் பொறுமையை இழந்து விட்டான் என்று எனக்குத் தெரிந்தது. அவனை தொடர்;ந்து நான கவனியாது விட்டால் அழத்தொடங்கிவிடுவான்

நான் வாசித்த புத்தகத்தை மூடிவிட்டு அவனைப் பார்த்துக் சொன்னேன்,
.
"ஐ ஆம் சொரி விஸ்வா. உன் நல்ல செய்தி என்ன சொல்?"

" டடாபொப் , எனக்கு சிறு கதைப் போட்டியில் ஸ்கூலிலை முதல் பரிசு கிடைத்திருக்;குது!"

" கொன்கிராஜுலேசன்ஸ் விஸ்வா என்ன் கதை அது? "

"இலங்கை ஜங்கில் கதை"

"என்ன இலங்கை ஜங்கிள் கதையா? உனக்கு இலங்கை ஜங்கில் பற்றி என்ன தெரியும்?. நீ; கனடாவில் பிறந்தவனாச்சே. இலங்கைக்கு ஒரு போதும நீ போக வில்லையே” என்றேன் நான்.

கதை சுவார்சியமான கதையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் இலங்கையில் ஒரு சேவேயராக (Surveyor) வேலை செய்த போது வன்னி, வில்பத்து. யால, மகியன்கன பொலநறுவை, கநதலாய், ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளைப பற்றி நன்கு அறிந்தனான்,.

“ அது சரி விஸ்வா நீ இலங்கைக்கு ஒரு போதும் போகவில்லையே. அந்தக் காடுகளைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?

“ என் அம்மா பிறந்தது கொழும்பில் என் அம்மம்மா பிறந்தது யாழ்ப்பாணத்தில். அவ வாழ்ந்தது தெற்கு இலங்கைப் பகுதிகளில். அவர்கள் எனக்கு வன்னி, வில்பத்து யால காடுகளைப் பற்றி பல கதைகள் சொன்னார்கள். யாலவில் உள்ள காதிர்காம முருகன் கோவிலைப் பற்றியும் சொன்னார்கள். நான் யூடியூப்பில போய் பார்த்து மேலும் அந்தக் காடுகளை பந்றியும்> கதிர்காமத்தைப் பற்றியும் தகவல் அறிந்தேன். அதுவே எனது கதைக்கு கருவாக அமைந்தது. டடாபொப் உங்களுக்குத் தெரியும்; எனக்கு இயற்கையென்றால் தனி மரியாதை என்று”, என்றான் விஸ்வா.

“ இப்போ தெரிகிறது உன் கற்பனை எப்படி உருவாகியது என்று. எந்தக் காட்டு சூழலில் கதையை உருவாக்கினாய்“?

“நான் தேர்நதெடுத்தது தென் இலங்கையில் கதிர்காமம் உள்ள யாலவன காட்டை. மயில், பிளமிங்கோ, காட்டுக்கோழி, ஆந்தை போன்ற பறவைகள், யானைகள், சிறுத்தை மான், நரிகள், கரடி, காட்டுப் பன்றி, எருமைகள், ஓநாய் போன்ற மிருகங்கள், முதலை, உடும்பு, பாம்பு, ஆமை போன்ற ஊர்வனங்கள் உள்ள காடு; மற்றும்; அழகான பறவைகள் வெளிநாடுகளிலில் இருந்து சீசனக்கு யால கட்டுக்கு விசா இல்லாமல் வந்து போகும்;”.

" அது சரி யாலவில் லயன் கிங் இல்லையா."

"நீங்கள்; ஏன் இலங்கை காட்டில் சிங்கம் இல்லையா என்ற கேட்கிறீர்கள் என்ஞ எனக்குத் தெரியும்"?

"ஏன் என்று சொல்லு பாரப்பம்”?

" இலங்கை காட்டில் சிங்கம் இல்லை. புலியும் சிறுததையும் தான் உண்டு. இலங்கையின் தேசீய கொடியில் சிங்கத்தின் படம் இருப்பதாலும் பெருபான்மை மகள் சிங்கபாகு வழி வந்தவர்கள் என்பதாலும்; சிங்கம் இலங்கைக்காட்டில் இருக்க வேண்டும் என்பதில்லை”.

" ஓ அப்படியா? அப்ப சிங்கள நாட்டில் சிங்கம் இல்லாத கதை சுவாரசியமாகத்தான் இருக்க வேண்டும். கதை யாலவில் உள்ள காட்டில் உயிரினரிகள்; பல இருக்கும் போலத் தெரிகிறது. எனக்கு உன கதையை கேட்க வேண்டும போல இருக்கு " என்றேன் நான் ஆவலுடன்.

அவனுக்கு நான் அவன் கதையை கேட்க ஆவலாக இருந்ததையிட்டு சந்தோஷத்தை கொடுத்தது. உடனே; தனது பையில் இருந்து சில ஆவணங்களை எடுத்து, தான் உருவாக்கிய " யால ஜஙகிலில் திருமணம்" என்ற கதையைப் படிக்கத் தொடங்கினான்.

"ஒரு நிமிஷம் விஸ்வா கதை நடக்கப் போகும் யால காட்டை முதலில் எனக்கு அறிமுகப்படுத்து. இலங்கையில் எங்கே இந்த யால வன பூங்கா அமைந்துள்ளது?” நான் ஒன்றும் தெரியாதவன் போல அவனது அறிவை சோதிக்கக் கேட்டேன்.

"யால வனப் பூங்கா, இலங்கையின் தெற்கு ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. பல சுற்லூலாப்; பயணிகள் விஜயம் செய்யும் தேசீய பூங்கா யால. பல வகையான விலங்கினங்களும், பறவைகளும். உயிரனங்களையும் தாயகமாகக் கொண்டது. கொழுமபில் இருந்து 250 கிமீ தூரத்தில உள்ளது. இலங்கையில் உள்ள 70 மிக முக்கிய பறவை பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது;. 250 பறவை இனங்கள் சீசனுக்கு வநது போகும். கும்புக்கன் ஓயா மற்றும் மானிக்க கங்கை இக் காட்டை தழுவிச் செல்கிறது. காட்டில் வாழும் உயிரினங்களுக்கு இந்த இரு ஆறுகளே தாகத்தை தீர்க்கிறது. பல சிறு குளங்களும் உண்டு”இ விஸ்வா யால காட்டினது சுழலைப் பற்றி விபரம் சொன்போது நான் திகைப்படைந்தேன்..;

"உன் கதையை நல்ல இயறகை வளம் உள்ள சூழலில் தான் அமைத்திருக்கிறாய். மேலே கதையைச் சொல்லு கேட்போம்” என்றேன் நான் ஆவலோடு;.

" யாலவில் உள்ள புள்ளி மான் கூடங்களில் முருகன் என்ற ஆண் மானும்; மற்றும் வள்ளி, என்ற பெண் மானும் அடிக்கடி மாணிக்க கங்கையில் நீர் குடிக்கும் போது சந்;தித்தன. தினச் சந்திப்பினால்; , அவர்களுக்கிடையே காதல் பிறந்தது" என்று சொல்லி சிரித்தான்.

“அப்போ காதல் கதையா. சரி மேலே சொல்லு. அது சரி விஸவா மான்களின் பெயர்களை; முருகன். வள்ளி என்று ஏன் வைத்தாய் வேறு பெயர்கள் உனக்கு கிடைக்கவில்லையா”?, நான் ஒன்றும்; தெரிரியாதவன் போலக் கேட்டேன்.

"அதற்கு காரணம் இருக்கிறது டடாபொப். இலங்கையில் பிரபல்யமான முருகன் கோவிலான கதிரகாமம்; கோவில் யாலவில் உள்ளது என்று அம்மம்மா சொல்லி கேள்விப்பட்டேன். முருகன், யாலவில் உள்ள கதிரகாமம் என்ற கிராமத்தில் வேடவப் பெண்; வள்ளியை முருகன் சந்தித்து காதலித்து திருமணம் செய்ததாக அம்மம்மா சொன்னவ. எனவே நான் இரு மான்களுக்கும் அந்த பெயர்கள் பொருத்தமான பெயர்கள் என நினைத்தேன்” என்றான் விஸ்வா.

அவனது கற்பனையை என் மனதுக்குள் பாராட்டிக் கொண்டேன்.

“ சரி கதையை மேலே சொல்லு கேட்போம் "

“ துள்ளித் திரிந்த புள்ளி மான் வள்ளியின் உடலில் இருந்த அழகான புள்ளிகள்,; முருகனை அம்மானின் மேல ஆசையை உருவாக்கியது. வள்ளி; முருகன் தலையில் இருந்த இரு கம்பீரமானதும், வேல் போல் கூர்மையுமான கொம்புகளால் கவரப்பட்டாள்;. அவர்கள் தினமும் மாணிக்க கங்கை கரையொரத்தில்; சந்தித்து ஒருவரை ஒருவர் உராசியபடி உறவாடினர். ஓடி விளையாடினர். பயிர்களை ஒன்றாக மேய்ந்தனர். அவரகள் இருவரையும் “டொட்” என்ற ஒரு குள்ள நரி கவனித்து கொண்டிருந்தது, டொட்டுக்கு வள்ளி மீது ஒரு கண். முருகன் மேல் பொறாமை. தன் தந்திர புத்தியைப் பாவித்து அவரகளை பிரிக்கும் திட்டம்மொன்றை போடடது டொட் என்ற நரி.

“ அது சரி வி;ஸ்வா நரிக்கு “டொட்”; என்ற புதுமையான ஆங்கிலப் பெயரை ஏன் வைத்தாய்?; கருணா என்ற தமிழ் பெயராக வைத்திருக்கலாமே”?

“நரியும் வேடடை நாயும் என்ற் டிஸ்னி கார்டூனில் வரும் நரிக்குப் பெயர் டொட் வேட்டை நாயுக்குப் பெயர் “கூப்பர்”;. அதனாலை அந்த பெயர்கள் என்டை நினைவுக்கு வந்தது. வைத்தேன. காதலர்களை காவல் காத்த ஓநாயுக்கு பெயர் “கூப்பர்”

“சரி மேலே கதையைச் சொல்லு”

“ஒரு நாள் முருகனும் வள்ளியும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தார்கள். வன விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் அவர்களின்; திருமணதுக்கு உதவிசெய்ய முன்வந்தன. வாழையும்,; தென்னையும், மாமரமும் திருமண வாசலை மாவிலை தேரணம் கட்டி அலங்கரித்ன. கணேஷ் என்ற யானை திருமண விழாவில் பூசாரியாக இருக்க சம்மதித்தார். தேனீக்கள் திருமணச் சடங்கிற்கு தேன் கொண்டு வந்தன, மாடுகள் சடங்குக்கு தேவைப்பட்ட பால் கொடுக் முன்வந்தன. முயல்கள் மற்றும் அணில்கள்,; கிழங்கு மற்றும் கொட்டைகள் ஆகிவற்றை திருமண சாப்பாட்டுக்கு கொண்டு வந்தன. திருமணத்திற்கு தேவையான வாசனைதிரவியங்களை . சந்தன மரம் மற்றும் மல்லிகை மலர் முன்வந்து வழங்கின. குளத்து தாமரை மலர்கள் சடங்கு மண்டபத்தை அலங்கரித்தன. திருமண வைபவ நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, பாடும் , குயில்கள், ஹம்மிங் பறவைகளும் ;ஒன்று சேர்ந்து இசைக் கச்சேரி நடத்த முன்வைந்தன. மயில்கள், காட்டு வானகோழிகள், வண்ணத்துப்பூச்சிகள், பாம்புகள்; நடன நிகழ்ச்சிகள் நடத்தின. இரண்டு குரங்குகள் விகடமாக் குத்துககரணம் அடித்து தமது செயற்திறனை காட்டின.

வள்ளியை கடத்த திட்டமிட்ட டொட் நரிக்கு உதவ,ஒரு மிருகங்களும் முன் வரவில்லை. சிறுத்தை உறுமி, “வள்ளியை நீ கடத்தினால் உன் மேல் நான் பாய்ந்து உனனை கொன்றுவிடுவேன் என்று டொட்டை எச்சரித்தது. தம்பதிகளை காவல் செய்த கூப்பர என்ற ஓநாயுக்குப் பயந்து, டொட் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதன் கடத்தல் திட்டம் மற்ற விலங்குகள் மூலம் முறியடிக்கப்பட்டது.

யால ஜங்கிள் திருமணம் வெற்றிகரமாக நடந்த போது மழை பொழந்து; எல்லோர மனங்களையும் குளிர வைத்தது. இடியிடித்து கொட்டு மேளம் கொட்டியது. மின்ளல் திருமண விழாவுக்கு வேண்டிய வெளிசத்தைக் கொடுத்தது, வானவில் வானில் தோன்றி வானத்தை பல வர்ணங்கலில் வில் போனற கோலம் இட்டு; அலங்கரித்தது.

மாணிக்க ஆற்றில் உள்ள ஒரு சிறிய தீவில் தேன் நிலவைக் கழிக்க முருகனும் வள்ளியும் தீர்மானித்தனர். தங்கள் திருமணத்துக்கு ஆதரவு தந்த யால வனபூங்காவில் வாழும் எலலா ஜீவராசிகளுக்கும் தங்கள் விருப்பத்தை அறிவித்தன. தேன் நிலவு பயணத்துக்கு; திருமண தம்பதிகளுக்கு போக்குவரத்து வழங்க காத்திருந்தது காட்டு எருமை. விலங்குகள் மற்றும் பறவைகள் சேர்ந்து தேனிலவு ஜோடி பயணம் செய்ய இருக்கும் காட்டு எருமையின்; வாலில் மரக் கட்டைகளை கட்டி, எருமை நகரும் போது அது உருவாக்கும் ஓசையானது; போது திருமணதம்பதிகளின் வாகனம் வருகிறது பராக் பராக் என ஓசை வரச் செய்தனர். கணேஷ் எக்காளம் இட்டு பிளிரியது. எருமை தம்பதிகளோடு தீவை நோக்கி நகரத்; தொடங்கியது. எருமை மேல முருகனும் வள்ளியும் வீற்றிருந்தனர். எருமையின் வாலில கட்டப்ட்ட சிறு மரக்குத்திகள் பெரிய ஓசையை உருவாக்கின. ஜவுராசிகள் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தன..

மாணிக்க கங்கை கரையில் ஜோடிகளை இறக்கிய பின்னர், தேன் நிலவு தீவில் ஆற்றின் குறுக்கே தன் முதுகின் மேல் அழைத்துச் செல்ல முதலை முன்வந்தது. முதலை மேல் ஜோடிகளின் மீண்டும் ஒரு மகிழ்ச்சியான பயணம் இருந்தது. வேறு மிருகங்கள்; இல்லாத அத்தீலுpல் முதலை ஜோடிகளை இறக்கிவிட்டது. அவர்கன் சநதோஷமாக ஓடி விiயாடவும், போதுமான இடமும், உண்ண பல வகை பழ மரங்களும், புற்தரையும,;; துணைக்கு பறைவகளும், கங்கையில் துள்ளி விளையாடும் மீன்களும்; தேனிலுவுத் தீவில் இருந்தன். தேன் கூடுகளில் இருந்த தேனீக்கள் தேனிலவுக்காக வந்த புதுமணத் தமபதிகளுக்கு தேன வழங்க தயாராக இருந்தன. பறவைகள் பாட்டு பாடி வரவேற்றன்". கதைச் சொல்லி முடித்து என்னைப் பார்த்தான் விஸ்வா.

நான் உடனே அவனை பார்த்து “ விஸவா உன் கதை யால காட்டில் வாழும்; ஜீவராசிகளோடு தொடர்பு படுத்தி, இயற்கைக்கு மதிப்பு கொடுத்து எழுதிய கதை பிரமாதம் . இக் கதை லயன் கிங் போன்று ஒரு டிஸ்னி படத்துக்கு உகந்த கதையாக இருக்கும் என்பது என கருத்து”; என்று அவனை பாரட்டினேன்.;.

அதறகு அவன் “என்னால் இக்கதை படமாக மாற்ற முடியும் டடாபொப”; என்றான் உறுதியோடு.

"நீ; என்ன சொல்லுகிறாய் .அதை எப்படி செய்ய முடியும்? இக்கதையை படமாக்குவதற்கு பணம் தேவையே. "

"டடாபொப் சற்று சில நாட்கள் நீங்கள் பொறுத்திருந்து பாருங்ஙகள். ஒரு கிழமைக்குள் இக் கதையை உஙகளுக்கு படமாக்கி காட்டுகிறேன்" உறுதியோடு பதில் சொனனான் விஸ்வா.;

ஒரு கிழமை கழித்து அவன் என்னை அழைத்து என்னை தனது கணினியில் தனது கதையை கருவாக வைத்து உருவாக்கப்பட்ட யால ஜங்கிள் திருமணப் படததை; காட்டினான் என்னால்; அதை நம்ப முடியவில்லை.

"அது சரி விஸ்வா இதை எப்படி படமாக மாற்றினாய்;? நான் அவனைக் கேட்டேன.

இதற்கு மைக்கிரோ சொபட் மூவி மேக்கர் (Movie Maker) ; என்ற சொப்ட்;வெயர் உண்டு அதைப் பாவித்து படத்தை உருவாக்கினேன் என்றான் விஸ்ர்.

எனக்கு அவன் சொன்னது கிரேக்க மொழி பேசவது போல் இருந்தது. நான் எனது நன்றியைத் தெரிவிக்கும் முகமாக அவனது கன்னங்களில் முத்தமிட்டேன்.

“விஸவா இந்த “யால ஜங்கில் திருமணம்”; படத்தை யூடியூபில் (ToiuTube) போடு. எல்லோரும் பார்க்கட்டும். கதை, வசனம்,; டைரக்க்ஷன், பட உருவாக்கம் விஸ்வா என்று உன் பெயரைப்; போட மறந்திடாதே” என்றேன் சிரித்தபடி.
“தாங்ஸ் உங்கள் ஆலோசனைளுக்கு டடாபொப். அதன் படி நான் செய்வேன்” என்றான் விஸ்வா.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் கனடா) (7-Mar-17, 9:59 am)
பார்வை : 304

மேலே