குறுங்கவி ஐந்து

நீல நீர்
ஆரஞ்சு வானம் கலந்திட‌
அழகிய காட்சி பிறந்தது..
== == == == ==
அலையில்லா நடுக்கடல்
நிலையாகச் செல்லும் கப்பல்
அமைதியான இனியப் பயணம்..
== == == == ==
பறவைகளின் ஓசை
பக்கத்திலே கரை
சீக்கிரமே வீடு
== == == == ==
ஒளியத்துடிக்கும் சூரியன்
உதிக்கத்துடிக்கும் நிலா
பயணம் வரைந்த ஓவியம் நினைவு
== == == == ==
காற்றின் திசையில் படகு
காட்சியின் திசையில் கவிதை
எழுத்தாய் விழுந்தது ஹைக்கூ
== == == == ==

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Mar-17, 7:09 pm)
பார்வை : 149

மேலே