அவளுக்குப் பெண்ணென்று பெயர்

மிக நீண்டதொரு சாலையில்
கண்களுக்கு முடிவே புலப்படாத
நெடும் பாதையின் வழியில்
கால்கள் பின்னலிட
நடந்து கொண்டே இருக்கின்றேன்
இது முதலா முடிவா
புரியாத வெளியில் தொடர் ஓட்டம்
அம்மாவிற்கும் ஞாபகமில்லை
அப்பாவும் யோசித்திருக்கலாம்
அவனும் புரிந்து கொண்டிருக்கலாம்
எதுவும் நடக்க போவதில்லை
எனக்கு பிடித்த யாவும்
நிகழ வேண்டும் என்பதுமில்லை
பூக்கள் திறந்து கொண்டது
வானம் கீற்றாய் அள்ளியது
நிலவு தரை இறங்கியது
யாருக்குத் தெரியும் யார் அறிவார்
நானிங்கு இருக்கின்றேன்
நானாக..
பொருளாய் மலராய் அழகாய்
கதைகள் வேண்டாம்
உயிராய் உறவாடல் தகுமே!
நான் சிரிக்கிறேன்
அவள் சிரிக்கிறாள்
என்னுள் மகிழ்கிறாள்
என் தோழி நான் நானே!


-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (8-Mar-17, 12:06 pm)
சேர்த்தது : கார்த்திகா
பார்வை : 905

மேலே