சோமு-ராமு உரையாடல்- பல் சுவை, நகைச்சுவை பற்றி

சோமு : ஐயா, ராமு ஐயா பல் சுவைகளில்
நகைச்சுவையும் ஒன்றுன்னு சொல்லறாங்க
இது ஏனுங்க , எப்படிங்க

ராமு : டேய் உனக்கு தெரியாததா நீயே சொல்லு பாப்போம்


சோமு (தலையை சற்று சொறிந்தவாறே யோசித்து பதில் அளித்தால்)
ஐயா "பல்" இல்லையென்றால் சொல் போச்சுன்னு சொல்லுவார் பெரியோர்
ஐயா நா சொல்வேன் "பல்" இல்லையென்றால் நகைத்தாள் எவ்வாறு
அதனால்தானோ என்னவோ "பல்" சுவைகளில் நகைச்சுவை ஒன்று
நம்முன்னோர் கூறினார்களோ;

ஐயா இந்த "பல்லிற்கு" மதிப்பு அளித்து நம் முன்னோர்
அதை காத்திட ஆளும் வேலும் பல்லுக்குறுதி என்றும் கூறி
இந்த மூலிகைகள் கொண்டு பல்லை காக்க வேண்டும் என்றன்றோ

இப்படி பல் சுவை, நகைச்சுவை, பல் சம்மந்தம் உண்டுன்னு
நான் நெனைக்கறேன் ராமு ஐயா

ராமு : டேய் சோமு நீ எங்கேயோ போய்ட்டடா; நீ ஒரு அறிவு ஜீவினு நான் சொல்வேன்
பெருமைப் படறேன்.


சோமு : ஹீ.....................ஹீ .....................அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க
ஏதோ இந்த சின்ன அறிவுக்கு தோணியதை சொன்னேனுங்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Mar-17, 1:45 pm)
பார்வை : 290

மேலே