ஆக்ஸிலேட்டர் பத்மாவதி

"ஆக்சிலேட்டர் பெண் பத்மாவதி"

கூலி வேலைக்கு போன பத்மாவதி இன்று ஆட்டோ ஓட்டுகிறார். நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுகிறார் என்பதனை கேள்விபட்ட உடன் மிக ஆச்சரியமாக இருந்தது.

அவரது ஆட்டோவில் ஏரி சவாரி சென்றவாரே உரையாடினேன். மறவன்குடியிருப்லிருந்து பத்மாவதியின் ஆட்டோ அவரது வீடு நோக்கி வடக்கு சூரன்குடிக்கு எங்களது பயணம் தொடர்ந்தது.

என் கணவர் அழகேசன் சம்பளத்திற்கு ஆட்டோ ஓட்டி வந்தார் நான் கிடைக்கிற கூலி வேலைக்கு போய் வந்தேன் வீட்டு செலவுக்கு சல்லி காசுக்கூட தரமாட்டார். கிடைக்கிற பணம் முழுவதையும் குடித்து காலி செய்து விட்டு கடும் போதையில் வீழ்ந்து கிடப்பார். தினமும் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது வீட்டு வாடகை, மகன் படிப்பு செலவு, கடன் சுமை என விவரிக்க முடியாத வாழ்க்கை சிக்கலில் தவித்தோம்.

அன்று தீபாளிக்கு முந்தைய நாள் ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் அபினேஷ் தனக்கு புது துணி எடுக்க வில்லை என வீட்டின் வறுமையை புரியாமல் அழுது அடம்பிடித்தான். வீட்டினை வெள்ளை அடிக்கவோ தீபாவளிக்கென பலகாரங்கள் செய்யவே கையில் பணம் இல்லை என் கணவரோ போதையில் சுயநினைவற்று திரிந்தார்.
ஆட்டோவின் உரிமையாளர் தனக்கு ஆட்டோவிற்கான வாடகை ரூபாய் தனக்கு கிடைக்க வில்லை என கோபபட்டு சப்தம் போட்டவாறே வீட்டின் வாசலில் நின்றார்.

தலைக்கு மேல் கடன் சுமை ஏறுவதை உணர்ந்தேன் ஆட்டோவின் உரிமையாளரிடம் சமாதானம் செல்லி அனுப்பி வைத்து ஒரு முடிவிற்கு வந்தேன்.

கணவர் ஓட்டும் ஆட்டோவினை நானே ஓட்டுவது என முடிவு செய்தேன்.அடுத்த நாள் முதல் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொள்ள சென்றேன். சரியா இரண்டு வாரத்தில் நல்லா ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டேன். ஆட்டோ ஓட்டுவதற்கான முறைப்படி லைசன்ஸ் பெற்ற பின் என் கணவர் ஓட்டிய அதே ஆட்டோவினை இன்று நான் ஓட்டி வருகிறேன் என்றார் பத்மாவதி.

தினமும் காலையில் 8 மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை ஆட்டோ ஓட்டுகிறதாக பத்மாவதி கூறினார். இன்று அவரது குடும்ப செலவினை பத்மாவதியே தாங்கி கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

இப்பவெல்லாம் நிறைய பெண்கள் என் ஆட்டோவில் தான் சவாரி வரவிரும்புகிறார்கள்.பெண்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு, என்னை உற்சாக படுத்துகிறார்கள் அன்போடு அழைக்கிறர்கள், ஒரு சில ஆண்கள் தான் சுத்த மோசம் ஸ்டாண்டி முதல் சவாரிக்கா நானும் எனது வண்டியும் நின்றாலும் என்னை ஒரு ஏளன பார்வையேடு கடந்து சென்று ஆண்கள் ஓட்டும் ஆட்டோவில் சவாரி மேற்கொள்கிறார்கள் அது மட்டும் தான் கொஞ்சம் என்னை சங்கடபடுத்துகிறது என்றார்.

சார் நான் இப்போது கடுமையா உழைக்கிறேன், நேர்மையா இருக்கிறேன், துணிச்சலோடு வாழ்கிறேன் வாழ்கையில் வரும் எல்லா கஸ்டங்களையும் தாங்கும் மனபக்குவத்தோடு நான் இன்று இருக்கிறேன் என்று புன்முறுவல் பூத்தார் பத்மாவதி.

புகைப்படம் எடுக்க அவரது கணவரை அழைக்க சொன்னேன். வீட்டின் கட்டிலில் முழு போதையில் படுத்திருந்த அழகேசனை கைதாங்கலாக அழைத்து வந்தார்.

சற்று பொருத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறியவாரே, தனது முந்தானையால் கணவரின் முகத்தினை துடைத்து தலை சீவி கொடுத்து சட்டை அணிவித்து கணவரை ஒழுங்கு படுத்தி படமெடுக்க நிறுத்தினார் பத்மாவதி.

“கல் ஆனாலும் கணவன் ஃபுல் ஆனாலும் புருசன்” என்ற வார்த்தை எனக்குள் நகைத்து ஓடியது.

பத்மாவதி போன்ற பல பெண்கள் தன் கணவரையும் குடும்பத்தினையும் தாங்கி கொள்வதில் தான் பெண்மை மேலும் மேலும் பெருமையடைகிறது.

#நிஜமான உலக மகளிர்_தின வாழ்த்துகள் "
சகோ.பத்மாவதியை போன்ற பெண்களுக்கே பொருந்தும்.!

பிடித்தால் பகிரவும்

எழுதியவர் : முகநூல் (8-Mar-17, 3:01 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 87

மேலே