தங்க கதவு பாலம்

கலிபோர்னியாவில் சான்ப்ரான்ஸிஸ்கோ நகரின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் கண்ணனுக்கு தென்படுவது கோல்டன் கேட் பாலத்தின் சிவப்பு கோபுரங்கள்தான். உலகிலேயே மிக அழகான பாலம் என்று கருதப்படுகிறது. சான் பிராசிஸ்கோ குடாவையும் பசிபிக் மாகடலையும் இணைக்கும் கோல்டன் கேட் ஜலசந்தியின் குறுக்கே கட்டப்பட்டது இந்த பாலம். ஒற்றைப் பாவளவு கொண்ட நீளமான தொங்கு பாலங்களில் மூன்றாவது இது.

இந்த பாலத்தை வடிவமைத்து கட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை வடிவமைத்தவர் "ஜோஸப் பேயர்மான் ஸ்ட்ராங்" எனும் அமெரிக்கப் பொறியியலார். 1934ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1937ஆம் ஆண்டு முடிவடைந்தது. உலகின் முதல் பிரமாண்டமான தொங்கு பாலம் இது. இதன் மொத்த நீளம் 2737 மீட்டர். இதன் ஆதாரக் கம்பங்களிடையே பரப்பளவு அதாவது இடைவெளி நீளம் 1280 மீட்டர். நீர்மட்டத்திலிருந்து 67 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இரு முனைகளிலுமுள்ள இரு கோபுரங்களிலிருந்து வரும் கம்பி வடம் இப்பாலத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. இந்த கம்பி வடம் 94 சென்டிமீட்டர் பருமனுடையது. கோபுரத்தின் உயரம் 227 மீட்டர்.

இந்த பாலத்தின் மீது ஆறு வழி போக்குவரத்து சாலையும், இரு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அரைமணி நேரத்தில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு நடந்து போய் விடலாம். மூடுபனி காலத்தில் பனியால் பாலம் போர்த்தப்பட்டு விடும். அப்போது இதன் கோபுர உச்சிகள் மட்டும் ஆகாயத்தில் மிதப்பது போல் தோற்றமளிக்கும். மிக அழகான இந்த பாலத்தில் இருந்து இயற்கையை ரசிப்பதற்குப் பதிலாக சிலர் தற்கொலை செய்வதற்கு தேர்ந்தெடுப்பது ஒரு துயரமான செய்தி.

1987ஆம் ஆண்டு இந்த பாலத்தின் பொன் விழா நடந்தது. ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் அதிகாலையிலேயே பாலத்தின் ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாட அங்கே கூடி விட்டனர். அப்போது வீசிய பலத்த காற்றும் பெருந்திரளான மக்களின் எடையும் பாலத்தை சற்று வளையச் சேய்தது,,.........

எழுதியவர் : Maharaj (8-Mar-17, 5:24 pm)
சேர்த்தது : மகாராஜ்
பார்வை : 144

மேலே