வாடியம்மா கழுத்து மாலை

வாடியம்மா கழுத்து மாலை,

இன்னைக்குத்தான் எங்க ஞாபகம்

வந்துச்சா?
😊😊😊😊😊😊😊😊
இல்லீங்க பாட்டிம்மா, நா போன வாரமே

வரலாம்னுதான் இருந்தேன். எங்க

பாட்டி குளியல் அறையில தவறி

விழுந்து அடிபட்டுருச்சு. அதனால

தான் என்னால வரமுடில. சரிங்க

பாட்டிம்மா, எதுக்கு என்ன கழுத்து

மாலைன்னு சொல்லி கூப்புடீங்க.
😊😊😊😊😊😊

உம் பேரு மாலா-தானா?

😊😊😊😊😊

ஆமாங்க பாட்டிம்மா; சொந்தப் பேர

யாராவது மறக்கமுடியுமா?

😊😊😊

சரி, நாந் தெரியாம தான்

கேக்கிறேன், உம் பேருக்கு என்னடி

அர்ததம்?

😊😊😊😊😊

என்னங்க பாட்டிம்மா, இப்பிடி கேட்டு

என்ன

கொழப்பறீங்க? எனக்கு அந்தப் பேர

வச்ச என்னோட அம்மா, அப்பாவுக்கே

மாலா-ங்கற இந்திப் பேருக்கு என்ன

அர்த்தம்னு தெரியாது.

😊😊😊😊😊😊

வாடி எம் பேரன் மனைவி

கழுத்துமாலை.

உம் பேருக்கு என்ன அர்த்தம்னு நாங்

கண்டுபிடுச்சுட்டுடண்டி.

😊😊😊😊😊😊

சரி, எம் பேருக்கான அர்த்தத்தை

சொல்லுங்க பாட்டிம்மா.

😊😊😊😊😊

எந் தங்கச்சி மகன் பேரன் நேத்து

என்னப் பாக்க வந்திருந்தாண்டி.

அவந்தான் இந்தி ஆசிரியர் ஆச்சே.

அவந்தான் எங்கிட்டச்

சொன்னான்:"பாட்டிம்மா, மாலா-ங்கற

இந்திப் பேரு நகைக் கடைல விக்கற

நெக்குலசைக் குறிக்கற பேரு"-ன்னு

சொன்னான்.

""நெக்குலசுக்கு நம்ம தமிழ்ல

என்னடா அர்த்தம்னு கேட்டேன்".

அவன் உடனே அகராதியப்

பொரடபொரட்டிப் பாத்துட்டு,

"பாட்டிம்மா, நெக்லசுக்கு தமிழ்ல "

கழுத்து மாலை"-ன்னு அர்த்தம்"'னு

சொன்னான்.

😊😊😊😊😊

அய்யய்யோ, எம் பேரு

கழுத்து மாலையா? இருங்க,

பாட்டிம்மா

உங்க பேரன் அய்தராபாத்திலிருந்து

வந்த ஒடனே எம் பேர 'முல்லை' -ன்னு

சட்டப்பூர்வமா மாத்திக்கிறேன்.

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Mala = Necklace
indiachildnamescom
Universal Deluxe Dictionary
நகைக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (9-Mar-17, 3:17 pm)
பார்வை : 291

மேலே