ஒரு பக்கக் காதல் கதை பாகம் -21

வெள்ளைக்காகிதமாய் அவன் மனம், அவளுடைய வார்த்தைகளுக்காக காத்திருந்தது. அவன் வயதும், உடம்பும் காமம் எதிர்பார்த்தாலும் அந்த பாய்ச்சலையும் தாண்டி ஏதோ ஒன்றை அவளிடம் தேடினான்.

அவளுக்கென தேடலையும், பயணத்தையும், பரிமாறுதலையும், பேரன்பையும் பெட்டியில் அடைத்துவைத்துக் காத்திருந்தான். அவனிக்கிது காதெலென எண்ணம் துளிகூட முளைக்கவில்லை. எது காதலென யாருக்குத்தான் தெரியும்...அவரவர்க்கு தோன்றுவதை அவரவர் பாணியில் காதெலெனக் கொள்கின்றனர், கொல்கின்றனர் என்பதே உண்மை.

நிதர்சனத்திற்கு அருகில் நிறுத்துவது நடைமுறை. காதல் கற்பனை உலகின் காவல் காரன்.

அவனோ இரண்டிற்கும் இடையில் சிக்கிக்கொண்டு, ஒரு காலால் தரையில் நடந்து, மறுகாலால் வானில் பறக்கிறான்

(கடற்கரையில் கவிஞர்கள் கூட்டம் இவனைப் பாடுபொருளாய் பேசுவதுபோல் உணர்ந்தான், அவர்களை இடைமறித்து.....)

அவன்: வைரமுத்து மாதிரி நல்லா பேசுறீங்க, ஆனா ஏன் இப்படி கதை விடுறீங்க ?

கவி: இது கதையல்ல, கவித்துவம்

அவன்: அதான் அதுல எப்பதான் உண்மையா பேசுவீங்க..அவ இல்லனா இவ செத்துருவானாம், இவன் இல்லனா அவ இல்லையாம்...மலை, கடல், காற்று, ஆகாயம், பச்சக்கிளி, புறா, ரோஜா, கல்லறை...இதுமட்டும்தான் காதல்னு சாசனம் உண்டா ?

கவி: கோமியத்துலையும் காதல் உண்டு, உங்க கண்ணுக்கு தெரியலைனா உலகமே இருட்டாகிடாது சார், காதல் பார்வையில் இல்லை பார்ப்பதில் உள்ளது


அவன்: காதலை உவமை இல்லாம சொல்லவே மாட்டீங்க அதான?

கவி: காதலே மற்றவர்களின் உவமைதானே சார், நீங்களோ, நானோ காதலை கண்டுபிடிக்கவில்லை, பிறர் கூற, கண்டு, கேட்டது அவ்வளவுதான்

(அவனுக்குள் ஏதோ பொறி தட்டியதை உணர்ந்து பட்டென விரைந்தான்..)

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (9-Mar-17, 10:03 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 419

மேலே