என்னவளுக்கும் ,எனக்குமான இரகசிய சந்திப்பு

என்னவளும்,நானும்...

காண வருவதை அறிந்திருப்பாளோ

வெண்ணிறாடையும் விரைந்து செல்கின்றது

விடியற்காலை போல் மலர்கின்றது இன்றிரவு

மணிகளும் கடக்கவில்லை

மனதில் திகழும் மர்மமும் முடியவில்லை

நொடி நொடியாய் கனவுகளை கோர்க்கும்

நெஞ்சமும் நிறுத்தவில்லை
அவளை எண்ணுவதை

சற்று தொலைவில் அவள் அமர்ந்திருந்தாள்

நிலா பெற்றேடுத்த பிள்ளை போல்

அவளிடம் இருந்து வரும் கதிர்வீச்சும்

காதலைத் தான் பேசுகின்றது

இதமாக வீசுகின்றது
அதிசிய பூ இவளோ

குறிஞ்சி போல்
இன்று பூத்திருக்கிறாள்

எனக்காகக் காத்திருக்கிறாள்

நானோ அவள் விழிக்கோலம் அறிய

அவளோ நான் வந்த வழிகோலத்தை ஆராய்ந்தாள்

யாரோ ஒருவர் பார்த்திட கூடத் தோன்றும்

பயந்த அந்தக் கயல்விழியால்
என்னை மொய்த்தாள்

மீன் உண்ணும் உணவாய் கொய்தாள்

கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சை.

எழுதியவர் : சண்முகவேல் (10-Mar-17, 12:32 pm)
பார்வை : 142

மேலே