தாயுமானவன்

உனக்காக உயிர் வாழ்கிறேன் ...
நீ வாழும் நாட்கள் வரை நான் வாழ்வேன் ...
கங்காருவாய் நான் மாறுவேன் ...
எப்பொழுதும் உன்னை சுமப்பேன் .....

உன்னோடே வாழ்வேன் ...
உன்னோடே வளர்வேன் ...
உன்னோடே நடைபோடுவேன் .....
உன்னோடே உயிர் விடுவேன் ...
(உனக்கு ஓர் நொடி முன்
நீ அறியாமலே
உன் மார்பில்
உன் இதயத் துடிப்பை கேட்டுக்கொண்டே
என் துடிப்பை நான் நிறுத்துவேன் .....)
உயிருடனும் உயிரற்றும் உன்னோடே கிடப்பேன்(இருப்பேன் ) .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Mar-17, 12:01 pm)
Tanglish : thayumanavan
பார்வை : 192

மேலே