ரசினி இசுடைலு

ஏண்டா பேரப் பையா பழனி, முன்பக்க சட்டைய எடது பக்கமும் வலது பக்கமும் மாறி இழுத்துக்காட்டியும் துண்டை தோள்பட்டைல போடறதையும், சிகுரெட்டை மேல தூக்கிப் போட்டு வாயில கவ்விப் பிடிச்சு தீக்குச்சிய ஒரஞ்சிப் பத்த வைக்கறத இசுடைலாப் பண்ணுவாரே சூப்பரு இசுட்டாரு ரசினிகாந்தோட பேருக்கு என்னடா அர்த்தம்?
@@@@@
பாட்டி கர்நாடாகவில பஸ் கண்டக்ரா வேலை பாத்த சிவாஜி ராவைத்தான் இயக்குநர் பாலச்சந்தர் ரஜினிகாந்த்-ங்கற பேரோட சினிமாவில அறிமுகப்படுத்தி வச்சாரு. ரஜினிக்கு பூர்வீகம் மகாராட்டிஷ்ர மாநிலம். அந்த மாநிலத்தச் சேர்ந்த ஒரு அமைப்பு "ரஜினி காந்த், நம்ம மண்ணின் மைந்தர். அவர் பிழைப்பதற்காக தமிழ் நாட்டுக்குப் போய் இலட்ச கணக்கான ரசிகர்களின் இதய தெயவமா இருக்கிறார். அவர் சிறப்பைப் போற்றும் வகையில் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கவேண்டும்" -ன்னு அறிக்கை வெளியிட்டுச்சு பாட்டிம்மா. அவுருக்கு இந்தி மராத்தி கன்னடம் தெலுங்கு எல்லாம் நல்லாத் தெரியும். அவுரு நடிக்க ஆரம்பிச்ச காலத்தில தமிழைக் கடிச்சுத் துப்புவாருன்னு என்னோட நண்பர்கள் சொல்லுவாங்க. நான் அப்ப கேரளாவில வேல பாத்துட்டு இருந்தேன். அவரோட உச்சரிப்பில 'தூள்' dhuuL ஆச்சு, நாம சந்தோஷம்-ன்னு சொல்லற சமஸ்கிருத வார்த்தைய அவுரு 'சந்த்தோஷம்' ன்னு சொல்லுவாரு.
@@@@@@

ஏண்டா பழனி, நா உங்கிட்ட என்ன கேட்டன்; நீ என்ன சொல்லிட்டு இருக்கற?
@@@@@

இல்லங்க பாட்டிம்மா நான் அவரப் பத்தி எனக்குத் தெரிஞ்ச விவரத்த உங்ககிட்டச் சொன்னேன். அவரு பேருக்கு என்ன அர்த்தம்னு இப்பச் சொல்லறேன். ரஜ்னி -ன்னா 'இரவு'ன்னு அர்த்தம். 'காந்த்' -ன்னா 'கடவுளின் அன்புக்குரிய' -ன்னு அர்த்தம் பாட்டிம்மா. ரஜ்னி -யைத்தான் பாலசந்தர் ரஜினி -ன்னு மாத்திருப்பாரு.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க.
##############################
indiachildnamescom. பார்க்கவும்.

எழுதியவர் : மலர் (11-Mar-17, 4:08 pm)
பார்வை : 305

மேலே