அலைபேசி ஆன்லைன்

அலைபேசி வழி அத்தனை குறுஞ்செய்தி
அனுப்பிவிட்டு ..
அவள் இன்னும் ,
ஆன்லைன் வரவில்லை எனில்
ஆண் மனது
என்னவோ
அலைகடல் அடிக்கடி தரைதொட்டு
தழுவிப்போவதைப்போல ..
அலைபேசி பார்த்து பார்த்தே
கரைந்து போகிறான் என்பதை
யாரும் அறிவதில்லை

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (12-Mar-17, 12:08 pm)
பார்வை : 281

மேலே