அம்மாவுக்கு அனுமதி இல்லை

புதிய அமெரிக்க னாதிபதி பதவிக்கு வந்ததும் நம்பமுடியாத பல சம்பவங்கள் இடம் பெறுவதை ஊடக வாயிலாக நாம்; அறிந்திருக்கிறோம். ஆமாம,;நடிகர்கள்; கமலஹாசனும், சாருக்கானும் அமெரிக்க இமிகிரேசனால் இருதடவை பல மணிநேரம் தடுத்து வைத், குறுக்கு விசாரணை செயயப்பட்டது பலர் அறிந்ததே. எல்லாமே அவர்களின் பெயர்கள் முஸ்லீம் பெயர்களை போல் இருந்ததே முக்கிய காரணம். அதில் ஒருவர் மடடுமே பிரபல்யமான முஸ்லீம் நடிகர். மற்றவர் இந்து பிராமணர்.

அமெரிக்க சுங்க இலாக்காவுக்கும், இமிகிரேசனுக்கும் உலக நாடுகள் பற்றிய நுண்ணறிவு மிகக் குறைவு என்றே கூறலாம். தங்கள் அமெரிக்காதான் உலகில் பெரியஈ சிறந்த நாடு என்பது அவர்கள் கருத்து. அதே கருத்து தான் தற்போதைய ஜனாதிபதிக்கும்

அதிகாரம் சில சமயங்களில் அவர்களின் நுண்ணறிவுக்கு குறுக்கே நிற்கிறது என்பதை எனக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவத்தை வைத்து சிறுகதை வடிவத்தில் எழுதியுள்ளேன். அமெரிக்கா ஒரு சொர்க்க பூமி. அங்கு போக வேண்டும்.; நல்வ சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும.; பச்சை அட்டை பெற்று பின்னர் பிரஜை ஆகி வாழ வேண்டும் என்று கனவு காண்பவர்கள் பலர்;. அந்;நாடு உண்மையில் ஒரு ஜனநாயக நாடா என்பதை பற்றி பல தடவை சிந்தித்துப் பார்க்க வேணடும். அங்கு வாழும் எல்லா இன மக்களும் சமனாக நடத்தப்படுகிறார்களா என்பது கேள்விக்குறி;.

மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் ஜெயராம் ஜெயலலிதாவின் சினமா நடிகை முதல் அரசியலில்; அரசியான வாழ்க்கைப் பயணம் (Jeyalalitha’s journey from Movie Star to Political Queen)) என்ற அவருககுத்; நன்கு தெரிந்த வசந்தி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 200 பக்கங்கள் அடங்கிய அழகிய அம்;மாவின் அட்டைப்படத்தோடு அடங்கிய நூலை அமேசன்.ca (Amazom.ca) பார்;த்ததும், வாங்கவேண்டும் என்று தீர்மானித்தேன். காரணம் தமிழ் நாட்டின் வரலாற்றில் சாதனை படைத்த பெண்கள் பட்டியலில் “இரும்புப் பெண்” என்று பெயர் பெற்ற அம்மா என்று தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஒருவர் என்பதே. நூலுக்கு 5 நட்சத்திர மதிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதுவுமல்லாமல் புரட்சித் தலைவர எம் ஜி ஆரோடு, துள்ளி, நடனமாடி, பாடி, துடிப்போடு வசனம் பேசி நடித்த பல படங்களைப் பார்த்;திருக்கிறேன்;. அதுவும் நான் அந்த நூலை வாங்க வேண்டும்; என் ஆவலைத் தூண்டியதுக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் நான் அவர் தலைவியாக இருந்த அரசியல் கட்சியின் ஆதரவாளன் அல்ல.
நான் பல தடவை அமெசனில் நூல்கள் வாங்கிய அனுபவம் எனக்குண்டு. நூலின் விலை கனேடிய டொலர்கள் 13.46. தபால் செலவு தனி. இந்நூலை
2017 ஜனவரி மாதம் விசா மூலம் பணம் செலுத்தி ஓடர் செய்தேன் சுமார் 45 நாட்களாகியும் எனது கைகளுக்கு நூல் கிடைக்கவில்லை. வழக்கத்தில் அமேசனில் நூலை ஓடர் செய்தால் ஒரு கிழமைக்குள் நூல் வந்துவிடுவதுண்டு.

வாடிக்கையாளர்கள் சேவை பகுதியயோடு தாமதத்தை பற்றி விசாரித்தபோது நூலுக்கு; வேறு நூல் விற்பனையாளர மூலம் ஓடர கொடுத்திருபதாகவும் அதனால் அவரோடு தோடர்பு கொண்டு தாமதத்துக்கு காரணத்தை அறிந்து அறிவிப்பவதாகச் சொன்னார்கள். ஒரு நாளில், மின் அஞ்சல் மூலம் பதில் வந்தது
“ அமெரிக்க கஸ்டம்ஸ் நூலை ஏற்றுமதிக்கு நிராகரித்துவிட்டது” என்பதே பதில்.
எனக்கு அந்தப் பதில் சிரிப்பை கொடுத்து. தமிழ்நாட்டின் முன்னைய முதல்வர் ஜெயலலிதாவை முஸ்லீம் பயங்கரவாதிகளின் தலைவி என அமெரிக்க கஸ்;டம்ஸ் கருதி விட்டதா? அந்த நூல் ஆபாச நூல் அல்;லவே. சுயசரிதை நூல் என்பதை நூலை வாசித்;துப் பார்த்டதால் ஆங்கிலம் தெரிந்த கஸ்டம்ஸ் அரிகாரி புரியாதா என்ன? அவ்வளவுக்கு குறுகிய நோக்கோடு தம் அதிகாரத்தைப் பாவிக்கிறார்களா என கேள்வி கேட்டு பதில் அனுப்பினேன்.
அதற்கு பதில் “ எங்களுக்கு புரிகிறது அவர்கள் மடமை. நாங்கள் எப்படியாவது உங்கள் கைகளுக்கு வெகுசீக்கிரம் நூல்; கிடைக்க வழி செய்கிறோம் என்றும், தாமதத்துக்காக வருந்தி, 5.00 கனேடிய டொலர்களுக்குச் செலவுச் சீட்டு (Gift Voucher) என் கணக்கில் வைப்பதாகவும்” அறிவித்தார்கள். அது அமேசனின் பெருந் தன்மையையும், வியாபார யுக்தியையும் குறிக்கிறது. அந்தப் பெரும் தன்மை அரச அதிகாரிகளுக்கு கிடையாதே! நூல்; கையில் கிடைத்த பின் பார்ப்;போம் என்று இருக்கிறேன். இது என்போன்ற புத்தகப் பிரியர்களுக்கு நல்ல அனுபவம்.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் – கனடா) (12-Mar-17, 5:32 pm)
பார்வை : 469

மேலே