புலியும் மனிதனும்

ஒரு மனிதன் காட்டில் ஒரு புலியிடம் தனியாக மாட்டிக்கொண்டான்.

புலி: நான் உன்னை சாப்பிட போகிறேன்.

மனிதன்: ஏன்?

புலி: எனக்கு மிகவும் பசி எடுக்கிறது. உன்னை சாப்பிட்டால் என் பசி தீர்ந்து விடும்.

மனிதன்: எனக்கும் மிகவும் பசி எடுக்கிறது. நான் போய் சாப்பிட்டு வந்து விடுகிறேன். அதற்கு அப்புறம் நீ என்னை சாப்பிடு.

புலி: அய்யோ!!! உனக்கும் பசி எடுக்கிறதா? சரி சரி நீ போய் சாப்பிட்டு சீக்கிரம் வா.

மனிதன் அங்கிருந்து ஓட ஆரம்பித்து விட்டான்.

நீங்கள் நினைக்கலாம் அந்த மனிதன் தப்பித்து விட்டான் என்று ஆனால் அந்த மனிதன் சாப்பிட்ட பிறகு திரும்பவும் புலியிடம் வந்தான்.

மனிதன்: நான் சாப்பிட்டு விட்டேன். இப்போது நீ என்னை சாப்பிட்டு கொள்.

புலி அவனை தின்று விட்டது.

மனிதனை நீ போய் சாப்பிட்டு வா என்று கூறிய புலி முட்டாளா? இல்ல. சாப்பிட்டு திரும்ப புலியிடம் வந்த மனிதன் முட்டாளா?

எழுதியவர் : சரவணன் (12-Mar-17, 8:05 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : puliyum manithanum
பார்வை : 443

மேலே