விவசாயி

இல்லத்திற்கு அன்னமிட்டாள் அன்னை!
நாட்டிற்கே அன்னமிட்டான் விவசாயி!
அன்னை நலம் அழிய
பிள்ளை மனம் பொறுக்குமோ!
பெற்ற வயிறு வாட
பிள்ளை வயிறு குளிருமோ?
மண் குளிர மழை தேவை
விவசாயி மனம் குளிர நம் உதவி தேவை
தற்கொலை நிகழ்வுகள்
தொடர்கதை ஆகலாமா?
இந்தியாவின் முதுகெலும்பு
மண்ணில் விழலாமா?
கை கொடுப்போம் வாரீர்!
விவசாயி தலை நிமிர
தோள் கொடுப்போம் வாரீர்!

எழுதியவர் : லட்சுமி (13-Mar-17, 9:49 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 1168

மேலே