கடவுள் எங்கே

நீலமான கடலிலே
நிஜமான நிறங்களா
வானமே நீலம் நிறம்
கொண்ட வெண்மையா...

நீலவே நீ வெண்மை
கொண்ட பெண்மையா
ஆதவா நீ ஓளி கொண்ட
ஆண்மையா....

உன்னை சுற்றி மற்றவர்கள்
பிரபஞ்சமே நீ அளவு காணா
ஆற்றலாய்
உன்னுள் எத்தனை சூரியன் !

எங்கள் கடவுளை நீதான்
எங்கே மறைத்து
வைத்துள்ளாய்
உன்னில் எங்குதேடுவது...

கல்லாய் அருள் தந்து
ஆலயத்தில்
வாழும் கடவுள் எங்கே
வரவில்லை.....

உயிராய் பிரபஞ்சம் எனும்
வெளியில் இருப்பாயா
தொடர்புகொள்ள வழியென்ன
 உன் மொளனம்
சொல்லும் பதில்தான் என்ன...

உன் செயலுக்கு விடியலின்
தேடுதல் என்ன
வா வந்து எங்களுக்கு
விடை கூறு....

பிரபஞ்ச ஞானம் தெரியா
உயிர்கள் உண்மை
சொல்வாய ஒருவருக்கேனும்
எப்பொழும் ஏங்கும் உயிர்கள்....

எழுதியவர் : சிவசக்தி (14-Mar-17, 10:12 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kadavul engae
பார்வை : 168

மேலே