குளத்தில் நிலவு

நீண்ட கரைகள்
ஆங்காங்கே தேங்கி இருந்தது
பாலாறு

பெரு வெடிப்பு
வெளி வர மறுக்கிறது
அவள் இதழ்

எச்சரிக்கை பலகை
கொஞ்சமும் மதிக்கவில்லை
ஆற்றில் வெள்ளம்

அசையும் இலை
விடாமல் அழைக்கிறது
கைப்பேசி

தாய்மையடைந்த பெண்
தலைச் சுற்ற தொடங்கியது
மின்விசிறி

குதித்த தவளை
முழுதாய் விழுங்கியது
குளத்தில் நிலவு

வாங்கிய புத்தகம்
பக்கம் விடாமல் படித்தது
கறையான்

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (14-Mar-17, 11:55 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : kulaththil nilavu
பார்வை : 81

மேலே