வான் மழை வண்ணப் பூங்குடை

வண்ணநற் பூங்குடை போல்விரிந்த நீலவானம்
எண்ணக் குவியல்போல் சூழ்ந்த முகில்கூட்டம்
அள்ளித் தெளித்திடும் பூமழைவண் ணக்குடையில்
பள்ளிச் சிறுமிதுள்ளல் பார்

இன்னிசை வெண்பா

ஈற்றடியை மாற்றிக் காதலருக்காக ....

வண்ணநற் பூங்குடை போல்விரிந்த நீலவானம்
எண்ணக் குவியல்போல் சூழ்ந்த முகில்கூட்டம்
அள்ளித் தெளித்திடும் பூமழைவண் ணக்குடையில்
காதல் களிப்பிலிரு வர்


ஈற்றடி மாற்றி கவிஞர்களுக்காக ....

வண்ணநற் பூங்குடை போல்விரிந்த நீலவானம்
எண்ணக் குவியல்போல் சூழ்ந்த முகில்கூட்டம்
அள்ளித் தெளித்திடும் பூமழைவண் ணக்குடையும்
இன்றிஆ டும்கவி ஞன் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-17, 10:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே