பயத்தின் பயணம்

அன்றும் எப்பவும் போல் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அப்போது மேலாளர் " வா , ராஜா .. இன்னைக்கு முருகையா விடுமுறைல போயிருக்காரு . அதனால ராணிமலை டூட்டி உனக்கு ." என்றார் . நானும் சரினு தலையை ஆட்டினேன் . ராணிமலை-: ,,பேருக்கேத்த மாதிரி மலை உச்சியில் இருக்கும் கிராமம் .ஒரே ஒரு பேருந்து தான் உள்ளது .

ஓட்டுநர் கோபி அண்ணனை பார்க்க சென்றேன் .முதல் சவாரி ஏழு மணிக்கு என்றார் . எல்லா சவாரியும் நன்றாக தான் போனது . ஆனால் கடைசி சவாரி ....!!!!

இரவு , கடைசி சவாரியை முடித்துவிட்டு மலையில் இருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தோம் . பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை . அப்போது ஒரு வயதானவர் கை அசைத்தவாறு நின்று கொண்டிருந்தார் . நான் " கோபி அண்ணே கொஞ்சம் நிப்பாட்டிக்கோங்க , பாவம் வயதானவர் ,ஏத்திக்கலாம் ." என்றேன் .கோபி அண்ணனபேருந்தை நிப்பாட்டினார் .
பெரியவரே எங்கே போகணும் நீங்க ? என்று வினவினேன் . அவர் சிரித்தவாறு " வழியில் இறங்கிடுவேன்ப " என்றார் .
நல்ல குளிர்ந்த காற்று வீச மெல்லமாக கண்ணில் தூக்கம் சொக்கியது ." பெரியவர் என்ன தூங்கிட்டாரா ? " என்று கோபி அண்ணன் கேட்டார் . திரும்பி பெரியவர் இருந்த இருக்கையை பார்த்தேன் . ஆனால் அங்கு பெரியவர் இல்லை .
கோபி அண்ணா ... பெரியவரை காணோம் என்று கத்தினேன் . கோபி அண்ணன் அதிர்ச்சியில் பேருந்தை நிறுத்தினார் . அப்போது பேருந்தின் பின்னால் கருப்பு உருவங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பார்த்தேன் .. கோபி அண்ணா பேருந்தை நிறுத்தாதீர் என்று கத்தினேன் . கோபி அண்ணன் பேருந்தை விரைவாக செலுத்தினார் . பயத்தில் என் மூச்சே நின்னது போல் இருந்தது . திடிரென்று என் தோளில் மூச்சு காத்து தட்டியது . பயத்தில் யாரென்று பார்த்தால் அது ஒரு கருப்பு உருவம் என்னை நோக்கி சிரித்தவாறே நின்றுகொண்டிருந்தது . அதன் பல்லில் இருந்து இரத்தம் சொட்டியது . கண்கள் பெரிய பூனை கண் போல் இருந்தது .அது கோரமாக சிரிக்க ஆரம்பிச்சது . என் கால்கள் நகரவில்லை . கத்த நினைத்தேன் ஆனால் சத்தம் வெளிவரவில்லை . கொஞ்சம் சுதாரித்து பின்னால் நகர்ந்ததும் கால் தடுக்கி கீழே விழுந்தேன் . கை இருக்கையில் இடித்தது . சட்டென்று அந்த கருப்பு உருவம் மறைந்தது . பேருந்தின் மேலேயும் கருப்பு உருவங்கள் ஏறும் சத்தம் கேட்டது . கோபி அண்ணன் கொஞ்சம் நிதானித்து சொன்னார் "இன்று அம்மாவாசை அதான் இப்படி ஆட்டம் போடுதுங்க ". பேருந்து ஓடிக்கொண்டிருந்தது ஆனாலும் கருப்பு உருவங்கள் விடாமல் பின்தொடர்ந்தன . அவர்களின் கோர சத்தம் காதை அடைத்தது . என் இருதயம் இடிப்பது எனக்கே நன்றாக கேட்டது . வியர்வையில் குளித்தேன் . உயிரை கையில் பிடித்து கொண்டு கோபி அண்ணன் பேருந்தை விரட்டினார் . சற்று தூரம் சென்றதும் கருப்பு உருவத்தை காணவில்லை .
"ஏங்க இன்னும் எழும்பலயா ?என்ற மனைவியின் குரல் கேட்டது ... கண்ணை திறந்த போது தான் தெரிந்தது அத்தனையும் கனவு என்று . மனது லேசானது .
"அம்மா மீன் வேணாமா ? "என்று கத்தினாள் மீன்காரி . இன்னைக்கு அம்மாவாசைம்மா வேணாம் என்றாள் என் மனைவி .
மனதில் ஒரு குழப்பம் எழுந்தது . வேலைக்கு கிளம்பினேன் ,அங்கு மேலாளர் " வா , ராஜா .. இன்னைக்கு முருகையா விடுமுறையி்லா போயிருக்காரு . அதனால ராணிமலை டூட்டி உனக்கு " என்றார் . அப்படியே உறைந்து போனேன் .

எழுதியவர் : (16-Mar-17, 4:18 pm)
சேர்த்தது : Sarah14
Tanglish : payaththin payanam
பார்வை : 441

மேலே