வைரமுத்து

என் கட்டுரை, என் குரல், என் அனுபவம், என் எண்ணங்கள், என் கனவுகள் மற்றும் நான்... என் முதல் கட்டுரை என்னை கவர்ந்த ஒரு கவிஞரை பற்றி இருக்க வேண்டும் என தோன்றுகிறது .. அவர் வைரமுத்து.. காரணங்கள் அதிகம் என்றாலும் அவர் தமிழ் முதல் காரணம்... தமிழ் மீது எனக்கு இருந்த பற்றையும் ஆர்வத்தையும் காதலாய் மாற்றிய மனிதர்... அழகு தமிழின் அதிசயத்தை அழகாய் ஆழமாய் உணர்த்தியவர்... தமிழை நான் மொழியாய் எண்ணிய தருணங்களில் எல்லாம் தன் வார்த்தைகளால் அதை உணர்வென கலந்தவர்... அவர் எழுதுகோள்களால் உயிர் பெற்ற தமிழ் வார்த்தைகள் என்னோடு பயணம் மேற்கொண்டு என் வாழ்வின் அங்கமானது.. வாழ்வின் தருணங்களை வார்த்தைகளால் உணர்த்தியவர்... தாய் மொழியை தவிர வேறு எந்த மொழிகளாலும் உணர்ச்சிகளை உள்வாங்க முடியாது என உணர வைத்தவர்... விளைவு இந்த பதிவு ... மொழி தாகத்தின் தீர்வு... தமிழ் என்னும் சமுத்திரத்தில் பயணிக்க நான் அமைத்த கட்டுமரம் ...அவர் உருவாக்கிய பல நூல்கள் சிம்மாசனமாய் திகழ, அதில் மகுடமாக அமர்ந்தது தண்ணீர் தேசம்... கடலையும் காதலையும் இயல்பாய் அறிவியலுடன் கலந்து சொன்ன நூல்... வார்த்தைகளையும் தாண்டி வாழ்க்கையின் பக்கங்களை உணர்த்தியது அதன் பக்கங்கள்...தமிழை நேசிக்கும் காதலிக்கும் அனைவருக்கும் தண்ணீர் தேசம் புத்தகம் என்பதையும் கடந்து ஒரு காலம் கடந்த காதல் கடிதம்... கவிதைகள் கதைகள் என அவர் தீட்டிய அனைத்தும் ஒரு அழகான ஓவியம்.. உணர்வுகளின் வெளிப்பாடாய் அமைத்தன அனைத்து நூல்களும்... கனவுகளை படர தமிழால் உதவிய வைரமுத்து என்ற கவிஞருக்கும் அவரின் மரணமில்லா வார்த்தைகளுக்கும் இந்த பதிவு ஒரு ரசிகையின் சமர்ப்பணம்..

எழுதியவர் : ஆதர்ஷினி (16-Mar-17, 4:23 pm)
சேர்த்தது : ஆதர்ஷினி
Tanglish : vairamutthu
பார்வை : 1179

மேலே