பாலைவன மங்கை

திருச்சியில் அகண்டகாவிரி எனப் புகழோடு விளங்கிய காவிரி, இன்று வான்மழை பொய்த்ததால் வறண்ட காவிரியாகக் காட்சியளிக்கிறது.

நீர்வளத்தால் சோலைகள் நடுவினில், கேளிக்கைக்குப் பெயர் பெற்ற முக்கொம்பும் இன்று களையிழந்து காணப்படுகிறது.

==================
பாலைவன மங்கை
==================

காவிரியென் கொடைதந்த..
பூவிரிந்த சோலையெலாம்..

முக்கொம்பில் எழில்மணம்பரப்ப..
புள்ளினமும் வண்டுகளுமொய்க்கும்..

கொள்ளிடமும்கூடவே அரவணைக்கும்..!
கொஞ்சுதமிழ் புகழ்பரப்பும்..!

காவிரி மங்கெயென..
காதலன்வருணன் துணையோடு..

தென்தமிழ் சிறக்க வேநான்..
தெற்காகப் பாய்ந்தோடிவந்தேன்..!

வான்பொழியும் காதலனைக்காணாது..
வறண்டுடல்வற்றி குறுகிப்போனேன்!

அகண்டகாவிரியென அகிலமறிந்தநான்..
வறண்டபாய் விரிபோல்ஆனேனே!

காதலனுக்கினி கிரக்கமில்லை!
கறங்கருவிபோலிருந்த வென்சத்தமோய்ந்து..

காய்ந்தநதி மணற்பரப்பாயிப்போது..
கடற்கரைபோல் ஆகிவிட்டேன்!

என்காதல் தோற்றாலும்..இனி
பிறர்காதல் செழிப்புடன்வாழ்கவென..

நதிக்கரை மணலாகநானுனக்கு..
அக்கரையோடு அடைக்கலம்தருவேன்!

மண்வளத்தைக் காத்திடவே..
மணற்கொள்ளை தடித்திடுவீர்!.

வற்றாத தமிழ்ச்சொல்லால்...நீர்
வற்றியயெனைப் பார்த்து...

"பாலைவன மங்கை"யென..நீயெனைப்
பாடுகவொரு பாவென்றாள்!...பாவை காவிரியவள்!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (16-Mar-17, 5:19 pm)
பார்வை : 198

மேலே