காதலின் ஊடல்

அந்திசாயும் நேரங்களில் ஆற்றங்கரை ஓரங்களில்
சந்தன தென்றலில் சந்திக்கும் வேளையில்
செந்தேன் வழிந்து செம்முல்லை அவிழ்ந்து
நந்தவன பூங்கொடியாய் நமதிரு உடலாடுமே......


செவ்வானம் முத்தமிட செவ்விதழ் ஒட்டிக்கொள்ள
செவ்வாழை மடல்போல் செம்மேனி தழுவிநிற்க
செவ்வரளி பூக்களென்று சில்வண்டு பறந்துவர
இவ்வுலகம் இருண்டாலும் இருவருக்கும் பகலாகுமே......


தேனிலவு ஆரம்பமோ?... தேவகனங்களின் சங்கமமோ?...
வானிலவு ஆசையில் வட்டமாய் எட்டிப்பார்க்க
வேனிற்கால இரவினில் வேல்விழிகள் மோகம்படிக்க
வானில் விண்மீன்கள் வாழ்த்துக்கள் பாடுமே......


வேதங்களும் சொல்லாத வேரற்ற பூமரமே
காதலிது கரையில்லா காவியத்தின் சரித்திரமே
நாதமெனும் வாய்மொழியில் நாளுமதைக் கற்றோமே
பாதங்களும் நேரமறிந்து பாதைமாறி வீடுசெல்லுமே......

எழுதியவர் : இதயம் விஜய் (16-Mar-17, 9:09 pm)
பார்வை : 232

மேலே