மலரும் வேளையில் அவள்

உன் முழு மதியால் வென்றாய் என்னை

முழு இரவும் பட்டினியாய் தின்றாய் என்னை

முன் பனி காலம் முடிந்துவிட்டதோ? இல்லையோ?...

இன்னம் வீட்டின் உள்ளே பனி புயல் வீசுகின்றது என்றிருந்தேன்

கண் விழித்தேன்
விரலில் வீணை வாசித்துக் கொண்டிருந்தாள்

என்னை மயக்கிய
கூந்தலைக் கொண்டு

அவள் இதழ்
என்னை அணுகியது கோபமாக

கொஞ்சிக் கொஞ்சி பேசும் கண்கள் என்னிடம் கொஞ்சமாக தான் பேசியது

அவள் மேனியை அலங்கரித்த
ஒவ்வொரு துளி தண்ணீரும்
புன்னகைத்தது

என் கண்கள் கதை கதைத்தது

நொடிப் பொழுதில் அவள் மடியில் மடிய

வானத்தின் அழகிற்கு நிலவை வைத்தது போல்

அவள் முகத்தில் இருந்த குங்குமம் என் மனதைச் சிற வைத்தது

அவள் இடையில் உள்ள பனித்துளியும் என் தாகத்தை தூண்டுகிறது

எழுதியவர் : சண்முகவேல் (17-Mar-17, 1:45 pm)
பார்வை : 215

மேலே