வாழ்க்கை

வாழ்க்கை!
இளைஞ்சனே!
பெரியோர் வார்த்தையை, வேதமாய் கொள்,
பிழை இருந்தால் சீர்திருத்தம், செய்து கொள்!

இளைஞ்சனே!
கடுகாய் காட்சி தரும், நீ தான்,
நாளைய ஆலமரமாய், நிழல் தருபவன்!
பொறுமையும், நிதானமும் உன்னுடன் இருந்தால்,
பெருமையும், புகழும் பொற்காலத்திற்கு வழிசொல்லும்!

தனக்காக பாடுபடுவதில், தவறொன்றும் இல்லை,
தனிமனிதன் வளர்ச்சி, அவசியம் தேவைதான்!
வேரில் ஊற்றிய நீர், முழுமரத்திற்கும் வளர்ச்சியைக் கொடுப்பதுபோல்,
தனிமனித வளர்ச்சி, மனித சமுதாய முழுமைக்கும், வளர்ச்சியை கொடுக்கும்!

பணம் எனும் இலைகள் துளிர்த்தால், உறவுகள் உண்டு மேயும்!
கடனெனும் முட்கள் மட்டும் மிச்சமென்றால்,
உறவுகள், எட்டி நின்றுசிரிக்கும்!
வரவு என்றால், வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம்,
வாய் ஜாலம் காட்டும்!
செலவு என்றால், ஊமை, செவிடு, குருடு கலந்த கலவைகளாகி விடும்!

காக்கையை சுமந்து செல்லும், எருமையின் நிலைதான்,
துன்பத்தை, சுமந்து செல்லும், மனிதனின் வாழ்க்கை
துன்பத்தை, சுமந்து செல்லும், மனிதனின் வாழ்க்கை!
புத்தி என்ற வாலால், துன்பக் காக்கையை விரட்டி விடு,
இல்லையேல், இதுவும் சுகமானது என்று பயணத்தை தொடர்ந்து விடு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (18-Mar-17, 6:55 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 754

மேலே