கனவுகள்

கனவுகள்!
கனவுகள், காண்பதே நிஜமாக்கத்தான்!
கற்பனை, செய்வதே செயல்படுத்தத் தான்!

சாதனை புரியத்தான் பிறந்தோம்,
சாதித்துக் கட்டுவதுதான் நம் வேலை!
விண்ணுக்கும், மண்ணுக்கும் பாலம் அமைக்கும்,
வானவில்லின், கர்வத்தை அடக்கப் பிறந்தோம்!

நிலவுக்கும், பூமிக்கும் பாலம் அமைப்போம், அதில்,
தொங்கும் தோட்டம் கூட சேர்த்து அமைப்போம்!
பொருள் பொதிந்த, என் வார்த்தைகள்,
பொதிகை மலை தென்றல் போல இதமானது!

முட்டி, மோதி, பார்ப்பதுதான் வாழ்க்கை,
மூலையில், முடங்கி கிடப்பது பெரும் தவறு!
காலம் வரும் என்று, காத்திருப்பது வீண்,
கதவை, தட்டி பார்த்தால், வழி தானே பிறக்கும்!

சாதனையாளன் மனக்கதவை, தட்டிப்பார்த்தால்,
தானே சொல்லும், தான் கடந்து வந்த பாதையை!
மிதித்த முள் எத்தனை? கடித்த செருப்பு எத்தனை?
பட்ட கல்லடி எத்தனை? பட்ட சொல்லடி எத்தனை?
நீளும், அதன் பட்டியல்!
கனவுகள் காண்போம், நிஜமாக்குவோம்!
கற்பனை செய்வோம், செயல் படுத்துவோம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (18-Mar-17, 7:35 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 1041

மேலே