தேன்தமிழ் காதல்தென்றல் மெல்ல வீசிட

மான்விழி யாழினி மலர்விழியில்
தேன்தமிழ் காதல் தென்றல்
பூவிரிசோலை வருவாள் புன்னகைபூத்து
காவிரி தந்ததமிழ்க் கவிதை !

வஞ்சி விருத்தம் .

மான்விழி யாழினி தன்பூ விழிதன்னில்
தேன்தமிழ் காதல்தென் றல்மெல்ல வீசிட
பூவிரிசோ லைவருவாள் புன்னகை பூவினைப்போல்
காவிரி பூந்தமிழ்ப்பா வாய்

இன்னிசை வெண்பாவாக ...

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Mar-17, 11:01 am)
பார்வை : 76

மேலே