என் உயிர் அல்லவா ஊசல் ஆடுகிறது

உன் கார்க்கூந்தலில் இருந்து
முன் சரிந்து விழும் நீள்கற்றை முடி
உன் நெற்றி தொட்டு
உன் இமை தொட்டு
உன் புருவம் தொட்டு
உன் கன்னம் தொட்டு
உன் இதழ் தொட்டு
காற்றின் அசைவால் ஊஞ்சல்
ஆடிக்கொண்டிருக்கிறது !!
அதை பார்த்து பார்த்து -என் உயிர்
ஊசலாடி கொண்டிருக்கிறது

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (18-Mar-17, 12:01 pm)
பார்வை : 184

மேலே