பிச்சை புக வேணாம்

அசிரன் என்பேன் அலரியோன் என்பேன்
அழலவன் அவனை அழற்கதிர் என்பேன்
ஆதபன் என்பேன் ஆதவன் என்பேன்
ஆழ்வான் தன்னை ஆம்பலரி என்பேன்
இமபடி அவனே ஓர் இருட்பகை அவனே
ஈரிலை பொருளாய் உடுப்பகை அவனே
எயிறிலி அவனே எரிகதிர் அவனே
எல்லியன் பெயரில் எல்லோன் அவனே
என்றவன் என்று என்றூழ் என்று
ஏழ்பரியோன் அவனை ஒளியவன் என்று
ஒற்றை பொருள் மீட்டும் எம்மொழிகொண்டு
கதிர் அவனை தீட்ட சொல் கோடியுண்டு
அறிந்திரா அறிவு ஆழியென்று அறிய நீ
அயல்மொழி துளியில் ஆர்ப்பரித்தல் ஏது
கோடி பொருள் கொண்ட புரவலன் இங்கு
பிச்சை புகும் ஓர் இச்சை நிலை தீது..


விளக்கம்: அசிரன், அழலவன் போன்று குறிப்பிடப்பட்டுள்ள
சொற்கள் சூரியனின் பிற வேறு பெயர்கள். இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்கும் பல பெயர் கொண்ட மொழி தமிழ்.
நாம் அறியாத பொருள் ஆழி(கடல்) போல் உள்ள தமிழை முழுதும் படிக்காமல் பிற மொழி பயில துடிப்பது மடமை...
அது அரசன் பிச்சை எடுக்கும் நிலை போன்றது..


$வினோ...

எழுதியவர் : வினோ.... (20-Mar-17, 9:39 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : pitchai booka VENAM
பார்வை : 144

மேலே