தாய்த்தமிழ்

எந்தன் ஆக்கமும் இயக்கமும்
ஊக்கமும் ஏக்கமும் தாக்கமும் நீயே
தமிழே தாயே இசையே இயற்கையே
நின் பாதம் பணிகிறேன்


நின் பாதம் அன்றி
வேறொருவர் காலை பிடிப்பேனா!
எந்தன் தமிழே தாயே ...

தமிழச்சியாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.....
எந்தன் தமிழை அன்றி
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் பெரிது இல்லை

தமிழும் தாயும் ஒன்றே தான் .....
அதற்கு இணை என்று ஒன்றும் இல்லை .....

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Mar-17, 11:21 am)
பார்வை : 1785

மேலே