2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை

2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய
கற்பனை..

இன்றைய முக்கிய செய்திகள்

* ஈரோடு அருகே வீட்டில்
பூட்டி வைத்திருந்த மூன்று குடம்
தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

* மூன்று வயது குழந்தையை lkgயில்
சேர்க்க இரண்டு குடம் தண்ணீர்
நன்கொடையாக கேட்ட
பள்ளி உரிமையாளர் கைது...

* கணவனுக்கு தெரியாமல் வீட்டில்
வைத்திருந்த 4 குடம்
தண்ணீரை எடுத்துக்கொண்டு
மனைவி கள்ளக்காதலுடன்
ஓட்டம். கணவன் 4 குடம்
தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல்
புகார் ...

* இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால்
ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர்
தருவதாக தண்ணீர் மோசடி கும்பல்
கைவரிசை....

* நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர்
தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி..
இதற்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ....

* பூமியிலிருந்து செவ்வாய்
கிரகத்திற்கு ராக்கெட். மூலம்
கடத்தி சென்ற 20,000 லிட்டர்
தண்ணீரை விண்வெளி காவல்துறையினர்
பறிமுதல்செய்தனர்

* உலக தண்ணீர் வங்கியில்
இருந்து இந்தியா 50 கோடி லிட்டர்
தண்ணீர் கடன் வாங்கியது

* பொது மக்கள் அனைவரும் மாதம்
ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்
இரண்டு சொம்பு தண்ணீர்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்று புதிய சட்டம்
அமல்படுத்தியது .மீறினால்
இரண்டு சொம்பு தண்ணீரும்
பறிமுதல் செய்யும்..

* உலக தண்ணீர் world cup கிரிக்கெட்டில்
இந்தியா தண்ணீர்
கோப்பையை வென்றது ...

*** தண்ணீர் நிலவரம்..
கிணற்று நீர் ஒரு லிட்டர்
ஆயிரம் ரூபாய்க்கும்
ஆற்று நீர் ஒரு லிட்டர்
பத்தாயிரம் ரூபாய்க்கும்
சுத்திகரிக்கப்பட்ட
நீர் ஓரு லிட்டர்
பதினைத்தாயிரம்
ரூபாய்க்கும்
விற்கபடுகின்றன...

* மரம்...வளர்ப்போம்..
வருகாலத்தை வளமாக்குவோம்...
வருங்கால நம் சந்ததிக்கு வாழ்வளிப்போம்.....

*** இது சிரிக்க அல்ல
*** சிந்திக்க மட்டுமே.

எழுதியவர் : கவிழகி செல்வி (21-Mar-17, 3:20 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 417

சிறந்த கட்டுரைகள்

மேலே