வாகன விளையாட்டு கணக்கு புதிர்- சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்-குல்கந்து இதழ்=12

வாகன விளையாட்டு கணக்கு புதிர்:- சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள்.தொகுத்து வழங்கியவர்:- (கோகி )

அது ஒரு விளையாட்டு வாகனம் (கார்) மகிழூந்து. இப்போது நீங்கள் அந்த விளையாட்டு வாகனத்தை இயக்குகிறீர்கள் அல்லது ஒட்டுகிறீர்கள் என்றால்.

ஓட்டுனரான உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கையில் (10) பத்து கிலோ எடை கொண்ட உங்களது சகோதரனை உட்காரவைத்து. வாகனத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு இருக்கைகளில் (25) இருபத்தைந்து கிலோ மற்றும் (30) முப்பது கிலோ எடை கொண்ட உங்களது இரண்டு சகோதரிகளை உட்காரவைத்து வாகனத்தை செலுத்துகிறீர்கள் என்றால் ..... கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.

1. வாகனத்தில் இருக்கும் மொத்த இருக்கைகள் எத்தனை?

2. வாகன ஓட்டுனரின் எடை என்ன?

3. வாகனத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் மொத்த எடை என்ன?

4. வாகனத்தில் இருக்கும் உங்களின் இளைய மற்றும் மூத்த சகோதர சகோதரிகள் எத்தனை பேர்?

5. வாகனத்தில் பெண்கள் அதிகமா? ஆண்கள் அதிகமா?

சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-04-2017 தேதிக்கு முன்னதாக "வைஷாலி ரீடேர்ஸ் சிர்க்ள் @ஜிமெயில் " மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 16-04-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 38-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.(கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்).

எழுதியவர் : வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீ (21-Mar-17, 3:51 pm)
பார்வை : 186

மேலே