சேவை கணக்கு புதிர் - வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-35 இதழ்=12 பங்குனி மாதம்

சேவை கணக்கு புதிர் :- வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-35 இதழ்=12 பங்குனி மாதம்

அம்மாவுக்கு உதவுவதற்காக நீங்களும் அம்மாவுடன் சேர்ந்து அழுக்கு துணிகளை மட்டும் துவைப்பதாகக் கொண்டால், அப்பாவின் துணி அலமாரியில் (2)-இரண்டு கால் சட்டையும், (2)-இரண்டு அழுக்கான முழுக்கை சட்டை என மொந்தம் (4) நான்கு துணிகள் இருந்தது, அம்மாவின் அலமாரியிலிருந்த துணிகள் மொத்தம் (6) ஆறு துணிகள் இருந்தது, உங்களின் அழுக்கு துணிகள் (4) நான்கும், உங்களுக்கு பிடித்த குட்டி பொம்மை அணிந்திருந்த துணி (1) ஒன்றும் இருந்தன.

அனைத்து அழுக்கு துணிகளையும் ஒன்றாக சேர்த்து துணி துவைக்கும் எந்திரத்தில் போட்டு, துவைத்து முடித்து, ....துவைத்த துணிகளை கொடியில் உலர்த்துவதாகக் கொண்டால்...... கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்.

1) நீங்கள் மொத்தம் எத்தனை துணிகளை துவைத்தீர்கள்?

2) நீங்கள் துவைத்து உலர்த்திய துணிகளில், ஒரு(1) துணி உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு (1) ஒரு மணி நேரம் தேவை என்றால், நீங்கள் துவைத்த மொத்த துணிகளும் உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு எத்தனை மணி நேரம் தேவை?

3)துவைத்த துணிகளில் ஆண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை, பெண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை?

4)நீங்கள் துவைத்த துணியில், குறைவான எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது?

5)நீங்கள் துவைத்த துணியில், அதிக எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது?

சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 10-04-2017 தேதிக்கு முன்னதாக "வைஷாலி ரீடேர்ஸ் சிர்க்ள் ஜிமெயில் " மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் 16-04-2017 (3-வது ஞாயிறு) அன்றைய, 38வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். (கதைக் கருத்தாக்கம்-ரேடியோ கோபாலகிருஷ்ணன்)

எழுதியவர் : வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீ (21-Mar-17, 3:54 pm)
பார்வை : 143

மேலே