கருணை தெய்வமே கற்பகமே - சிந்துபைரவி

மதுரை ஸ்ரீனிவாசன் இயற்றி, மயிலைக் கற்பகாம்பாளைப் பாடும் 'கருணை தெய்வமே கற்பகமே'
என்ற பாடலை அபிராமி அந்தாதியின் 'தனம் தரும் கல்வி தரும்' பாடலைப் பாடி, சிந்துபைரவி
ராகத்தில் சுதா ரகுநாதன் இனிமையாகப் பாடுவதை யு ட்யூபில் கேட்கலாம்.

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. (அபிராமி அந்தாதி)

(பெற்றவளும் நீ பெருமை சேர்ப்பவளும் நீ
அதி அற்புதம் விளைக்கும் அன்னையே
இரு பொற்பதங்கள் பணிந்தோம் பரவசமாய் தாயே
கருணையே கற்பகமே என்றும் எங்களைக் காக்க வேணுமே)

கருணை தெய்வமே கற்பகமே
காண வேண்டும் உந்தன் பொற்பதமே (என் கருணை)

உறுதுணையாக எம் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறே யாரோ எம் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்
அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்
நாளும் உன்னை தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-17, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே