இயற்கையை பதுகாத்துப்பார்

இயற்கையை பதுகாத்துப்பார்!
மனிதா!
நீர்நிலைகளை விழுங்காதே!
உன்னால் அளிக்கப்படும்,
நீர் வாழ் உயிரினங்கள், சபித்ததால்,
உனக்கு தண்ணீரில் கண்டம்!

காடுகளை அளிக்காதே!
நீ அளித்த மரங்களிலும், புதர்களிலும்,
வாழ்ந்த உயிரினங்கள், உன்னால் அழிக்கப்பட்டு, சபித்ததால்,
உனக்கு விசஜந்துக்களாலும், வன விலங்குகளாலும் கண்டம்!

காற்று மண்டலத்தை அழிக்காதே!
அன்று பிராண வாயுடன் இருந்தது,
இன்று பிராணனை எடுக்கும் வாயுக்களுடன்!
காத்திருக்கிறது, உன்னை அழிப்பதற்கு!
இருக்கிறது, உனக்கு காற்றினிலும் கண்டம்!

இயற்கையை அழித்ததால், இயற்கையே உனக்கு, கண்டமாய்...

போனவருஷம் பேஞ்சி கெடுத்தது,
இந்த வருஷம் காஞ்சி கெடுக்குது!
விவசாயியின் புலம்பல், உனக்கு இளையராஜாவின் இன்னிசையா?

தள்ளு வண்டியில், குடம் குடமாய் தண்ணீர்,
நடை பயிற்சி பழகுகிறதே, குடம் நாப்பது ரூபாய் என்று!
அதோ, அதை வாங்கும் பாட்டியின் வசை, உனக்கு இசையா?

சிந்தித்துப்பார்...
அழிப்பதை விட்டு, இயற்கையை பாதுகாத்துப் பார்!
அது வாழும், என்றும் உனக்காக!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (21-Mar-17, 11:13 pm)
பார்வை : 97

மேலே