ஊதாரி

ஊதாரி
நிறை குடம் நானில்லை
குறை குடம் நானில்லை
வெற்று குளமென நானிருக்கிறேன்
சான்றோர் திசை சாய்ந்தும்
பஞ்சாரத்தில் மூடி வைத்த - சித்தம்
சித்தம் முழுவதும் சூழியம்
உடன் திரிந்தோர் உரைத்தார்
உன் விதியென
சட்டென சுட்டது
விதி விளக்கெல்லாம்
வீதி விளக்கு ஆகுமோ!
வீதி விளக்கு போல்
ஒளி தருமோ!
விதியில் என்னும்
மடமையில் மாட்டிக் கொண்டவன்
யானில்லை என
என் சித்தம் முதல் முறை
சிறந்த அலைவரிசையில்
உரக்க குரைத்தது
கவன சிதறல்களை பொருக்கினேன்
பொருத்தினேன் ஒர் புள்ளியில்
ஞான பலம் வரவில்லை
ஞானம் வருவதாக
உடன் திரிந்தோர் கூற
யான் அறிந்தேன்
வீதி செய்வோம் வாரீர்
வீதியில் நிற்பவனும்
விதி மாற்றுவான்

எழுதியவர் : கமலக்கண்ணன் (21-Mar-17, 11:21 pm)
பார்வை : 188

மேலே