அம்பாலிகா - சிற்றுண்டி சிறுகதை

அம்பாலிகா - சிற்றுண்டி சிறுகதை
=================================

மூன்றாம் யாமத்துக் கனவில்
புறங்கடையில் இறங்கி
தடவுகளை ஒதுக்கி
சற்றே நடந்தால் ஒரு குளமிருக்கு
தேவதைக்குளம்
அவனோடுள்ள
நிறைய சண்டைகளுக்குப்பின்னால்
அம்பாலிகா
தேவதைக் குளத்து பரதேவதைக்கு
விளக்கேற்ற சென்றிருந்தாள்
அப்போது
நிறைய இறகுள்ள
ஒரு மயில்
அவளைச்சுற்றி பறந்து வந்து
முன்புள்ள நிலவிளக்கின்மேல் நின்றது
அது அம்பாலிகையை நோக்கி
வட்டமிட்டு வட்டமிட்டு
ஓரோரு பீலியாய்
உதிர்த்துக்கொண்டிருந்தது ,
காடு முழுதும் பீலிகள் நிறைந்துகொண்டிருப்பதை
அங்கிருந்தவர்கள் கண்டபோது
அந்தரீக்ஷத்தில்
பறந்துகிடக்கின்ற
பீலித்தும்புகளுக்கு இடையினூடே
அம்பாலிகையைக்
கைப்பிடித்து நடந்துபோகின்ற
தேஜஸ்கள் நிரம்பிய ஒரு தேவகந்தர்வன் அவன்
அதுவரை,
யாரும் காணாத தேவகந்தர்வன்
அம்பாலிகையை
கண்முன்னில் நிறுத்தி
நேரே அக்குளத்திற்குள் மூழ்கிவிட்டிருந்தான்
பின்பொருக்கிலும் திரும்பி வரவில்லை
அங்கிருந்தவர்கள்
குளம் முழுவதும் வற்றச்செய்து
எத்தனைத் தேடியும், காணவில்லை

Cut.......................

அன்றொருநாள்,எதுவுமே இருக்கவில்லை,
நம் சந்தோஷங்களைத் தவிர.
நிலவொளியும் ஓயும் பாடில்லை,
இந்த இரவு, முடியும்பாடில்லை,
மரணித்த தோளில்
முகப்பூ சாய்ந்திருக்கிறாள் நினைவுகள்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (22-Mar-17, 1:34 am)
பார்வை : 59

மேலே