என் இதய அலையோடு ஓயாத வரிகள் கவி வரிகள் - 2

என் இதய அலையோடு ஓயாத வரிகள் :
கவி வரிகள் - 2:

சேராத காதல் என்று எதுவும் இல்லை
உனைச் சேரும் நாள் ஏனோ இன்னும் கூடவில்லை
பகல் இரவுகள் பல பொழுதுகள் பார்த்து காத்து கிடக்கிறேன்
உன் விரல் பிடித்து இறுதி வரை தொடர,
இங்கே கடல்,
அங்கே நதி ,
இணைந்திட நடை போடுதே!
அங்கே வெயில்,
இங்கே நிழல்,
விழுந்திட இடம் தேடுதே!
தண்ணீரிலே காவியம்,
கண்ணீரிலே ஓவியம் .

ஆயிரம் உறவுகள் வாழ்வில்,
அண்ணன் என்ற சொந்தம் அது தந்தையின் சாயல்.
வேண்டியதை வேண்டாமலே தரும் இதயம்,
எல்லோருக்கும் வாய்க்காத வரம்.
ஓர் நாள் உனை பிரிய நேருமே அன்றோடு எனை மறந்து விடாதே.
அண்ணே போய் வரவா அழகே போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளக்கி ஒத்த எடந்தானே
தவளைக்கும் பொம்பளக்கும் ரெண்டு எடுத்தானே...

கண் கொண்டு களவாடிய உறவு
உயிரினில் இளைத்து செதுக்கிய கனவு
நொடி பொழுது அதுவும் பிரிவின் வலியே
விலகாது எனதாவி உனையே
நிதமும் சேர்த்து வைத்த ஆசைகள் ஓர் நாள் உயிரூட்டுவோம் திருமணமாக,
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெயில் வரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்..

எங்கே அவன் என இவளின் விழி தேடும்
தினமும் காண வேண்டும் என்று வாடும்
பார்க்காத நாட்கள் என் நாட்குறிப்பில் இல்லை
பார்த்த நேரமோ போதவில்லை,
எந்நேரமும் உன் நினைவின் மயக்கம்
ஓயாமல் எனைச் சுற்றியே இருக்கும்.
ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...

முத்தமிழ் சொல்லோடு இணைத்து
நிதமும் வரிகள் பரித்து உனக்காக கவிதை மலரை தொடுக்கிறேன்,
உன் உயிர் காதலுக்கு எதை தருவேன்
என் இதயத்தை மலராக்கி தருகிறேன் ஏற்றுக்கொள்வாயா.
இசைக்கவி ஒன்றை படைத்தே பரிசாக தருகிறேன்.
சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது 
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது 
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது 
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது 
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் 
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் 
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி ...


தமிழ் ப்ரியா...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (22-Mar-17, 1:41 pm)
பார்வை : 254

மேலே